* புடலங்காய் கொடிவகையான காய்கறி வகையைச் சேர்ந்த ஒரு வெப்ப மண்டலப் பயிராகும்.


                  * வீட்டுத் தோட்டங்களில் தொங்கும் புடலங்காயின் தாயகம் இந்தியா. இதன் தாவர விஞ்ஞானப் பெயர், டிரிச்சோசன்தீன் ஆங்கினா என்பதாகும்.


                  * இவற்றின் காய்கள் நீண்டு பச்சையாக தொங்கும்.


                  * புடலங்காயில் கொத்துப்புடல், நாய்ப்புடல், பன்றிப்புடல், பேய்ப்புடல், என பலவகை உள்ளது.


                  * பன்றிப்புடல் கொடியாக இருந்தாலும் நீளமாக இல்லாமல் நீளம் குறைவாக இருக்கும்.


                  * பேய்ப்புடல் மிகவும் கசப்பானது. அதனால் இதனை சமையலுக்கு பயன்படுத்தமாட்டார்கள்.

புடலங்காய் வரலாறு

                  * வெண்டைக்காய் பருத்திச் செடியின் குடும்பத்தை சேர்ந்தது.


                  * தாவரவியல்படி செம்பருத்தி ஹாலிஹாக் என்னும் பூச்செடி வகை. இந்த பூக்களின் அமைப்பும், வெண்டைக்காய் பூவின் அமைப்பும் ஒரே மாதிரியானவை.


                  * வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா நாடு. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோர நாடுகள், பிறகு இந்தியா என்று அடுத்தடுத்து அறிமுகமாகியது.


                  *  கி.பி 1600களில் அடிமை வியாபாரம் தொடங்கிய காலகட்டத்தில் ஆப்பிரிக்கர்கள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.


                  * வெண்டைக்காய்க்கு வெப்பம் அதிகமுள்ள நிலமும், பகல் மற்றும் இரவு இரண்டிலும் சூடான சூழ்நிலையும் அவசியம்.


                  * இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் விளைச்சல் அதிகம்.


                  * இளசாக இருக்கும் வெண்டை வெண்மையாகவும், நீளமாகவும், நுனி கூராகவும் இருப்பதால் ஆங்கிலத்தில் இதை பெண்ணின் விரல் என்கிறார்கள். 

வெண்டைக்காய் வரலாறு

                  * முருங்கைக் காய் நீளமான அளவில் தடி போன்ற வடிவில் இருக்கும். இதன் உயிரியல் பெயர் முருங்கா ஓலிஃபேரா.


                  * முருங்கைக்காய் மரவகையைச் சேர்ந்தது. இது 30 அடி உயரம் வரை வளரக்கூடியது.


                  * முருக்கக்காய் முதலில் இமயமலை அடிவாரம், பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் பயிரிடப்பட்டிருந்தது.


                  *  தற்போது தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது.


                  * முருங்கைமரம் வறட்சியைத் தாங்கக்கூடிய மரம் என்பதால் ஆப்பிரிக்காவிலும், தெற்கு ஆசியாவிலும் முருங்கை உணவில் முக்கிய இடம் வகிக்கின்றது.

முருங்கைக்காய் வரலாறு

                   * சுரைக்காய் உணவாகப் பயன்படும் ஒரு வெப்பமண்டல கொடிவகை தாவரமாகும்.


                   * சுரைக்காயின் தாயகம், ஆப்பிரிக்கா என்று கூறப்படுகிறது.


                   * உலகில் மனிதனால் பயிரிடப்பட்ட முதல் தாவரங்களுள் சுரைக்காயும் ஒன்று.


                   * தொடக்கத்தில் இது உணவுக்காகப் பயிரிடப்படவில்லை.இதன் காய்கள் நீர்கலன்களாகப் பயன்பட்டன.


                   * தற்காலத்தில் இது உலகெங்கும் உணவாகப் பயன்படுகிறது.

சுரைக்காய் வரலாறு

                    * கோவைக்காய் கொடிவகை தாவரங்களில் ஒன்று. இதனை தொண்டைக்கொடி என அழைக்கின்றனர்.


                    * வேலிகள், தோட்டங்கள், காடுகளில் இந்த கொடி படர்ந்து காணப்படும்.


                    * இதன் பழங்கள் இனிப்பு, புளிப்பு, கசப்பு தன்மை கொண்டது.


                    * கோவையின் நிறத்தையும், வடிவத்தையும் கொண்டு இதனை பலவகையாகப் பிரிக்கின்றனர்.


                    * இதன் இலை, காய், வற்றல், தண்டு, கிழங்கு அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை 

கோவக்காய் வரலாறு

                   * கொத்தவரக்காய் ஒரு சிறு செடிவகை காய்கறிகளில் ஒன்று.


                   * இதன் காய்கள், செடியில் கொத்துக் கொத்தாக காய்க்கும் இயல்பை உடையது.


                   * கொத்தவரை, ஆப்பிரிக்க காட்டு வகை செடியிலிருந்து மேம்பட்ட ஒரு வகை தாவரம் ஆகும். உண்ணக்கூடிய ஒரு காயாக இனம் கண்டு பயன்படுத்தியது இந்தியா மற்றும் பாக்கிஸ்தான். குறிப்பாக இந்திய-பாக்கிஸ்தான் எல்லைப் பகுதியான ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.


                   * சமையலுக்காக பயன்படுத்துவதைக் காட்டிலும் கொத்தவரை விதையிலிருந்து பிரித்தெடுக்கப்படும் கார் பிசின் உணவுத்தயாரிப்பு தொழிலில் முக்கிய சேர்க்கைப் பொருளாகவும், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளிலும் பயன்படுகிறது.


                   * அதனாலயே இன்று இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பணப்பயிர்களில் முக்கியமானதாக கொத்தவரக்காய் உள்ளது.

கொத்தவரக்காய் வரலாறு

                 * கம்பானது பச்சை மற்றும் வெண்மை கலந்த ஒரு புன்செய் நில சிறுதானியப் பயிராகும்.


                 * பொதுவாக ஆப்ரிக்கக் கண்டத்தில் இது தோன்றியதாகக் கருதப்படுகிறது. ஏறத்தாழ 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் கம்பு உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.


                 * குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் கம்பு மனிதர்களுக்கு உணவாகவும், கால்நடைத் தீவனமாகவும், எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.


                 * இந்தியாவில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில், கம்பு 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது தெரியவருகிறது. கம்புப் பயிர் வறட்சியை தாங்கிக்கொண்டு வளரக்கூடியது.


                 * அதிக தட்ப வெப்ப சூழலிலும், குறைவான ஊட்டமுள்ள நிலங்களிலும் கூட வளரும் தன்மை உடையது.


                 * தமிழகத்தில் நெல், கோதுமை, சோளத்துக்கு அடுத்தபடியாக பயிரிடப்படும் உணவு பயிர் கம்பு ஆகும்.


                 * உணவுத் தன்மையிலும் மற்ற தானியங்களை விட அதிகமான சத்துப் பொருள்களை பெற்றுள்ளது.


                 * தற்காலத்தில் கம்பு உணவு அதிகம் சமைக்கப் படாததற்குக் காரணம், கம்பை உணவாக்குவதற்கு நிறைய வேலை செய்ய வேண்டியிருப்பதும், அதற்கு அதிக நேரம் தேவைப்படுவதும்தான்.


                 * இக்குறைகளைப் போக்கி, எளிதாகக் கம்பு உணவினைத் தயாரிக்க, கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் உடனடி கம்புசாதக் கலவை ஒன்றை உருவாக்கி அதற்குக் காப்புரிமை பெற்றுள்ளது. 

கம்பு வரலாறு

                 * கோதுமை உலகில் முதலில் பயிரிடப்பட்ட புல் வகையைச் சேர்ந்த தாவர வகைகளில் ஒன்றாகும்.


                 * இதன் தாயகம் மத்திய கிழக்கின் லிவான்ட் பிரதேசம் மற்றும் எத்தோப்பிய உயர்நிலங்களாகும். எனினும் இன்று கோதுமை உலகெங்கும் பயிரிடப்படுகிறது.


                 * இது உலகில் மக்காச்சோளம், அரிசிக்கு அடுத்து மூன்றாவதாக அதிகம் பயிரிடப்படுகிறது.


                 * கி.மு.7000 ஆம் ஆண்டிலிருந்தே இந்திய துணைக்கண்டம், கோதுமை மற்றும் பார்லி ஆகியவற்றைப் பயிரிட்டு வந்தது.


                 * கோதுமை  ஒரு மித வெப்பமண்டலப் பயிராகும். கோதுமை வளரக் குளிர்ந்த காலநிலைத் தேவைப்படுகிறது.


                 * தமிழகத்தில் நீலகிரி, கொடைக்கானல், சேர்வராயன் மலை, ஏற்காடு, ஜவ்வாது மலை பகுதிகளில் கோதுமை பயிரிடப்படுகிறது.

கோதுமை வரலாறு