தமிழ்க்கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும்.
தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்னாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும்.
கொடிய அரக்கன் தாரகனை அழித்து உலக உயிரினங்களை துன்பத்தில் இருந்து மீட்ட தினம் தை மாதப் பூச நட்சத்திர தினமாகும்.
தைப்பூசத்தில் முருகனுக்கு பலவித பூஜைகள், நிவேதனங்கள் செய்து ஆராதிப்பதுடன் கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை பாராயணம் செய்யலாம்.
தைப்பூச தினத்தில் முருகன் அருள்பாலிக்கும் தலத்திற்கு சென்று வழிபடுவது மிகவும் நல்லது.
கருத்துகள் இல்லை