* மரத்தின் பெயர் : கிளுவை மரம்
* தாவரவியல் பெயர் : கமிபோரா காடாட்டா
* ஆங்கில பெயர் : Hill mango tree
* தாயகம் : இந்தியா
* மண் வகை : அனைத்து வகை மண்ணிலும் வளரும் மரம்
* தாவர குடும்பம் : பர்சரேசியே
பொதுப்பண்புகள் :
* கிளுவை என்பது வேலிக்காக வளர்க்கப்படும் சிறு வகை மரம்.
* இது ஒரு இலை உதிர் மரம். இதில் சிறு கிளுவை, பெருங்கிளுவை என இருவகைகள் உள்ளன.
* இவை முறையே செங்கிளுவை, வெண் கிளுவை எனவும் குறிப்பிடப்படுவது உண்டு.
பயன்கள் :
* வெண் கிளுவையின் இலை, பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
* கிளுவை மரங்கள் பொதுவாக விவசாய நிலங்களுக்கு உயிர்வேலியாக பயன்படுகிறது.
* இந்த மரத்தின் இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
கருத்துகள் இல்லை