இயற்கையாகக் கிடைக்கும் ஒரு பொருளை மதிப்புமிக்க பொருளாக மாற்றினால் வெற்றி நிச்சயம். அந்த வகையில் வீணாகக் குப்பையில் போடப்பட்டு வந்த பாக்குமட்டையிலிருந்து சுற்றுபுறச்சூழலைப் பாதிக்காத வகையில் தட்டுகள் தயாரிக்க ஆரம்பித்தனர், இப்போது அது மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கோயில்களில் பிரசாதம் வழங்க, விசேஷங்களில் சிற்றுண்டிகள் வழங்க என பெருமளவில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறுதொழில் செய்ய நினைப்பவர்களுக்கும் குறைந்த முதலீட்டில் தொழில் செய்ய நினைப்பவர்களுக்கும் இந்த தொழில் நிச்சயம் கை கொடுக்கும். அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு ஏதுவான தொழில் இது.
* கட்டிங் மெசின்
* பிரஸ்ஸிங் மெசின்
* அதன் பிறகு பிரஷ்ஷினால் சுத்தம் செய்து அதிலிருக்கும் அழுக்குகளை அகற்ற வேண்டும்.
* சுத்தம் செய்யப் பயன்படுத்தும் தண்ணீரில் வேப்ப எண்ணெய் அல்லது மஞ்சள் தூள் போன்றவற்றை கலந்து கொள்ளலாம். இதனால் மட்டைகளில் பூஞ்சை வருவது தடுக்கப்படும்.
* பிறகு அந்த மட்டைகளை சூரிய வெளிச்சத்திலோ அல்லது காற்றிலோ உலர வைக்க வேண்டும். ஆனால், மட்டை காய்ந்து பிளந்துவிடும் அளவுக்கு காய வைக்கக் கூடாது. பக்குவமான பதத்தில் காய்ந்த மட்டைகளே சரியாக வரும்.
* காய்ந்த மட்டைகளை இயந்திரத்தில் கொடுத்து ஃபிரஸ் செய்யும்போது வெப்பத்தினால் மட்டை பக்குவப்பட்டுவிடும்.
* சூடு தணிந்த பின்பு தட்டுக்களை தேவையான அளவுகளில் இயந்திரத்திலேயே கட் செய்து எடுத்து, சுத்தம் செய்தால் விற்பனைக்கு ரெடி!
தேவையான பொருட்கள் :
* பாக்கு மட்டை* கட்டிங் மெசின்
* பிரஸ்ஸிங் மெசின்
தயாரிக்கும் முறை :
* பாக்கு மட்டையை சுத்தமான தண்ணீர் தொட்டியில் பத்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.* அதன் பிறகு பிரஷ்ஷினால் சுத்தம் செய்து அதிலிருக்கும் அழுக்குகளை அகற்ற வேண்டும்.
* சுத்தம் செய்யப் பயன்படுத்தும் தண்ணீரில் வேப்ப எண்ணெய் அல்லது மஞ்சள் தூள் போன்றவற்றை கலந்து கொள்ளலாம். இதனால் மட்டைகளில் பூஞ்சை வருவது தடுக்கப்படும்.
* பிறகு அந்த மட்டைகளை சூரிய வெளிச்சத்திலோ அல்லது காற்றிலோ உலர வைக்க வேண்டும். ஆனால், மட்டை காய்ந்து பிளந்துவிடும் அளவுக்கு காய வைக்கக் கூடாது. பக்குவமான பதத்தில் காய்ந்த மட்டைகளே சரியாக வரும்.
* காய்ந்த மட்டைகளை இயந்திரத்தில் கொடுத்து ஃபிரஸ் செய்யும்போது வெப்பத்தினால் மட்டை பக்குவப்பட்டுவிடும்.
* சூடு தணிந்த பின்பு தட்டுக்களை தேவையான அளவுகளில் இயந்திரத்திலேயே கட் செய்து எடுத்து, சுத்தம் செய்தால் விற்பனைக்கு ரெடி!
கருத்துகள் இல்லை