தற்போது அதிக லாபம் தரும் தொழில் ஒன்று ஆடு வளர்ப்பு அதிலும் முக்கியமாக கிடாய்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. பிரபலமாகி வரும் செம்மறி கிடாய் வளர்ப்பு பற்றி பார்ப்போம்.

இரகங்கள் :

                   * ஆடு வளர்க்கும் முன் லாபம் தரும் இரகங்களை தேர்ந்தெடுப்பது லாபம் அடைவதற்கான உத்தியாகும். அதனால் வேகமாக, குறுகிய காலத்தில் எடை அதிகரிக்கும் இரகங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

                  * கூடூர் வெள்ளை மற்றும் ராமநாதபுரம் சிகப்பு ரக செம்மறி ஆடுகள் பிரபலமானவை. சிகப்பு ரகங்கள் நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்தவை. வட தமிழகத்தில் அதிகமாக வெள்ளை ரகங்கள் வளர்க்கப்படுகின்றன. ஏனெனில் வெள்ளை இரகங்கள் வேகமாக வளர்கின்றன.

தீவனம் :

                      * புல் வகைகளை மட்டுமே விரும்பி உண்கின்றன. அதனால் செம்மறி ஆடுகளை சுதந்திரமாக மேய்ச்சலுக்கு விடப்படுகின்றன. இவை வெள்ளாடுகள் போன்று தழைகளை விரும்புவது இல்லை.

                      * இதனால் ஓரளவு இயற்கை முறையில் களை கட்டுப்படுத்த முடியும். பகலில் இவற்றால் இடக்கூடிய சாணம் வயலில் உரமாகிறது. மாலையில் வளர்ப்பு புல் வகைகளை அறுவடை செய்து உணவாக கொடுக்கலாம்.

                     * அடர்தீவனம் அவசியம் கொடுக்க வேண்டும். கம்பு, மக்காச்சோளம், கடலை புண்ணாக்கு, உளுந்து பொட்டு தூள் இவற்றுடன் தாது உப்பு கலவை தகுந்த விகிதத்தில் கலந்து அளிப்பதால் மிக திடமாக வளரும்.

குடற்புழு நீக்கம் :

                 * 3 மாதங்களில் முதல் குடற்புழு நீக்கம் செய்து பின்னர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்வது மூலம் எடை விரைவாக அதிகரிக்கும்.

நோய் தடுப்பு :

                   * செம்மறி ஆடுகளுக்கு அந்தந்த பருவங்களில் தாக்கும் நோய்களுக்கு ஏற்ப தடுப்பூசிகள் போடவேண்டும். கிடாக்களுக்கு விதை நீக்கம் அவசியம் இதன் காரணமாக ஒன்றுடன் ஒன்று சண்டை இட்டுக்கொள்வது தவிர்க்கலாம். மற்றபடி அதிக எடை விரைவாக வரும்.

கொட்டில் பராமரிப்பு :

                    * இரவில் தரையில் அரை அடி உயரம் மணல் பரப்பிய கொட்டில்களில் அடைப்பதன் மூலம் நோய்கள் பரவுவது தவிர்க்கலாம். மழை காலங்களில் கொட்டில் ஈரமாகி நோய் தாக்குதலில் இருந்து தடுக்கலாம்.

                    * தினமும் செம்மறி ஆடுகளின் கழிவுகளை அள்ளி சுத்தம் செய்ய வேண்டும். சுண்ணாம்பு தூள் இரண்டு நாட்கள் ஒருமுறை கொட்டில்களில் தூவ வேண்டும். இதன் மூலமாக நோய்களை தடுக்கலாம்.

விற்பனை காலம் :

                   * ஆறு முதல் எட்டு மாதம் வரை வளர்க்கப்பட்டு இஸ்லாமியப் பண்டிகைகளில் விற்பனை செய்வதற்கு ஏற்ப வளர்க்கப்படுகின்றன. 25 முதல் 30 கிலோ எடை வந்த உடனே விற்பனை செய்யப்படுகிறது.

செம்மறி ஆட்டு எரு பயன்கள் :

                   * கிடாய்களின் கழிவுகளின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மண் புழு உரத்தில் அதிக நுண்ணூட்டச்சத்துகள் காணப்படுகிறது. தோட்டக்கலை பயிர்கள் நன்கு வளரும். பழங்கள் மிகவும் சுவையாக இருக்கும்.

                   * மற்ற பயிர்களுக்கு இடும்போது அதன் மகசூல் அளிக்கும் காலம் நீட்டிக்கப்படும். மாடி தோட்டங்களுக்கு சத்தான இயற்கை உரமாக பயன்படுகிறது.

செம்மறி ஆட்டு கிடாய் வளர்ப்பு முறை

கருத்துகள் இல்லை