நோட்டுப் புத்தகத்தின் தேவை என்ன என்பதைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், வீடுகள் என எல்லா இடங்களிலும் இதற்கான தேவை இருந்து கொண்டுதான் இருக்கிறது. கம்ப்யூட்டர், லேப்டாப் என தொழில்நுட்பம் பெரிதாக வளர்ந்துவிட்டாலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இன்றும் நோட்டுப் புத்தகங்களில்தான் எழுதி வருகின்றனர்.

மூலப் பொருள் :

                     * நோட்டுப் புத்தகம் தயாரிக்கத் தேவைப்படும் பேப்பர் ஆனது சுருள் வடிவிலும், பெரிய ஷீட் வடிவிலும் கிடைக்கிறது.

தயாரிப்பு முறை :

                 * நோட்டுப் புத்தகங்கள் இரண்டு வகையாகத் தயாரிக்கப்படுகிறது. 40-90 பக்கம் கொண்ட நோட்டு புத்தகம் ஒரு வகை. 192-400 வரையிலான பக்கங்களைக் கொண்ட நோட்டுப் புத்தகம் மற்றொரு வகை. இந்த இரண்டு வகையைப் பொறுத்து தயாரிப்பு வேலைகள் மாறும்.

ரூலிங் மெஷின் :

                      * இந்த மெஷினில் பேப்பரை வைத்து நமது தேவைக்கேற்ப நோட்டுப் புத்தகத்தில் வரிகளைப் போட பயன்படுகிறது. இந்த மெஷின் முதலில் மார்ஜின் லைனும், பின்னர் தேவையான வரிகளையும் போடுகிறது. இந்த வேலை செய்ய இரண்டு ஆட்கள் தேவைப்படுவார்கள். இப்படி வரிகளுடன் அச்சாகி வரும் பேப்பர்கள் எண்ணப்பட்டு தனியாக வைக்கப்படும். அன்ரூல்டு நோட்புக்கை மட்டுமே தயாரிப்பவர்களுக்கு இந்த மெஷின் தேவையிருக்காது.

கட்டிங் மெஷின் :

                     * எண்ணப்பட்ட பேப்பர்கள் தேவைப்படும் அளவுக்கு ஏற்ப வெட்டப்படுகிறது. சின்ன நோட்டு, பெரிய நோட்டு என்று தேவைப்படும் அளவுகளில் வெட்டிக் கொள்ளலாம். இந்த வேலையினைச் செய்ய இரண்டு ஆட்கள் தேவை.

ஃபின்னிங் மெஷின் :

                       * வெட்டப்பட்ட பக்கங்கள் ஃபின்னிங் மெஷின் மூலம் பின் அடிக்கப்படுகிறது. இந்த வேலையைச் செய்ய மூன்று பேர் தேவைப்படுவார்கள். பின் அடிக்கப்பட்ட நோட்டுகள் கட்டிங் மெஷின் மூலம் வெட்டுகிறார்கள்.

பைண்டிங் மெஷின் :

                     * இப்படி வெட்டப்பட்டு வருகிற பெரிய நோட்டுகளில் வெளிப்பக்கமாக அட்டை வைத்து 300 செல்சியஸ் அளவுக்கு சூடாக்கப்பட்ட பசையை கொண்டு ஒட்டுகிறார்கள். இந்த வேலையைச் செய்ய மூன்று பேர் தேவை. பின்னர் மீண்டும் கட்டிங் மெஷினில் வைத்து பிசிறில்லாமல் சீராக வெட்டி சரி செய்கிறார்கள்.

பிரிண்டிங் மெஷின் :

                   * இந்த மெஷின் மூலம்தான் நோட்டின் அட்டைகள் பிரிண்ட் செய்யப்படுகிறது. இந்த மெஷினைக் கொண்டு முகப்பு அட்டையில் வேண்டிய டிசைன் அல்லது படங்களை பிரிண்ட் செய்து கொள்ளலாம். இந்த மெஷினை புத்தகங்களை அச்சடிக்கவும், வேறு பல பிரிண்டிங் வேலை செய்யவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நோட்டுப் புத்தகம் தயாரிப்பு

கருத்துகள் இல்லை