வீரிய ரக கோழி மற்றும் வாத்திற்கு அடுத்தபடியாக ஜப்பானிய காடை வளர்க்கப்பட்டு வருகிறது. இவை பெரும்பாலும் இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் வளர்க்கப்படுகின்றன. மிகக் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் ஜப்பானிய காடையை வளர்க்கலாம்.

ஜப்பானிய காடை வளர்ப்பின் நன்மைகள் :

                     * ஜப்பானிய காடை வளர்ப்புக்கு அதிக அளவில் முதலீடு தேவையில்லை. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதால் இவை அனைத்து தட்பவெப்ப நிலையிலும் நன்கு வளரும் தன்மை கொண்டது.
                     * ஜப்பானிய காடைகளுக்கு தடுப்பூசிகள் அதிகம் தேவைப்படாது. ஐந்து முதல் ஆறு வாரத்திற்குள் விற்பனைக்கு தயாராகி வருகின்றன. இதனால் முதலீடு செய்த குறைந்த நாட்களிலேயே பலன் கொடுக்கின்றன.
                     * ஜப்பானிய காடை ஆறு வாரத்திற்கு அதிகபட்சமாக 500 கிராம் அளவே தீவனம் உட்கொள்ளும். அதன்படி தீவனச் செலவும் குறைவு.
                     * காடை இறைச்சி அதிக அளவு புரதச்சத்தும், குறைந்த அளவு கொழுப்புச்சத்தும் கொண்டது. உண்பதற்கு சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

இறைச்சி :

                       * காடையின் ருசிமிக்க இறைச்சி, மலிவு விலை மற்றும் அதிக புரதச்சத்து போன்ற காரணங்களால் ஓட்டல்கள் மற்றும் துரித உணவுக்கூடங்களில் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகின்றன.
                       * இதனால் காடை வளர்ப்பு தொழிலுக்கு அதிக சிறப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொழிலை சிறந்த முறையில் பயிற்சி பெற்ற பிறகு தொடங்கினால் லாபம் மட்டும் தான்.

தீவனம் :

                         * ஜப்பானிய காடைகளுக்கு கோழித் தீவனத்தை தான் பயன்படுத்துகின்றனர். காடைகளுக்கு குஞ்சுப் பருவத்தில் வழங்கும் தீவனம் 26 - 28 சதவீதம் புரதம் நிறைந்ததாக இருக்க வேண்டும். இந்த வகைத் தீவனத்தை முதல் 6 வாரம் வரை கொடுக்கலாம்.

ஜப்பானிய காடை வளர்ப்பு முறை

கருத்துகள் இல்லை