இயற்கையாக கிடைக்கும் பூக்களை கொண்டு உருவாக்கப்படும் பொக்கேக்களுக்கு ஆயுட்காலம் என்பது மிகக் குறைவு, ஆகையால் தற்போது செயற்கை பொக்கேக்களுக்கு மார்க்கெட்டில் அதிக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த செயற்கை ரோஸ் பொக்கேக்களை எளிதில் வீட்டிலிருந்தே செய்து அவற்றின் மூலம் அதிக லாபம் பெற முடியும். அவற்றை எவ்வாறு உருவாக்கி விற்பனை செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
* பூ கட்டும் கம்பி
* கிரீன் பேப்பர் செல்லோ டேப்
* பின்பு ஒவ்வொரு துண்டையும் தனித்தனியாக மடித்து இதழாக மாற்ற வேண்டும்.
* இதழ் செய்ய முதலில் ஒவ்வொரு துண்டையும் தனித்தனியாக துண்டின் வலது, இடது புற முனைகள் தொடும் வகையில் மடிக்க வேண்டும். பின்னர் கீழ், மேல் முனைகள் இணையும் வகையில் மடிக்க வேண்டும். பின்னர் அதை சமமாக இடது, வலமாக மடிக்க வேண்டும். இரு முனைகளையும் வெளிப்புறமாக மடிக்க வேண்டும். இப்போது சிறியது முதல் பெரியது வரை வெவ்வேறு அளவுகளில் தனித்தனி இதழ்கள் தயாராகி இருக்கும்.
* பின்னர் அடுத்தடுத்த இதழ்களை ஒவ்வொன்றாக சுற்றியும் வைத்து ஒவ்வொரு இதழுக்கும் பச்சை நிற நூலால் கட்ட வேண்டும். இந்த 7 இதழ்களையும் கட்டி முடித்தால் பூ தயாராகும்.
* பூவின் கீழ் பகுதி முதல் கம்பி முழுவதும் கிரீன் பேப்பர் செல்லோ டேப்பால் சுற்றினால் கம்பி பச்சை நிற காம்பாக தோற்றமளிக்கும். இப்போது காம்போடு கூடிய முழுமையான பூ தயாராகும்.
* பின்பு பொக்கே கோனில் கிரீன் கிராப்பை கொத்தாக சொருகி, அதன் மேல் பூவை செருகினால் செயற்கை ரோஸ் பொக்கே தயாராகிவிடும்.
* இதனை விற்பனை செய்வதன் மூலம் அதிகப்படியான லாபம் பெற முடியும்.
தேவையான பொருட்கள் :
* ஆர்கன்டி துணி* பூ கட்டும் கம்பி
* கிரீன் பேப்பர் செல்லோ டேப்
தயாரிக்கும் முறை :
* இந்த செயற்கை ரோஸ் பொக்கே தயாரிக்க முதலில் பொக்கே கோன் மற்றும் பூக்களை தனித்தனியாக தயாரிக்க வேண்டும். பூக்களை தயார் செய்வதற்கு முன்பு அதற்கான இதழ்களை தயார் செய்ய வேண்டும்.இதழ் :
* இதழ் தயாரிக்க ஆர்கன்டி துணியில் ஒன்றே முக்கால் இஞ்ச் அளவில் 1 துண்டு, 2 இஞ்ச் அளவில் 1 துண்டு, இரண்டரை இஞ்ச் அளவில் 2 துண்டு, இரண்டே முக்கால் இஞ்ச் அளவில் 1 துண்டு, 3 இஞ்ச் அளவில் 2 துண்டு என மொத்த 7 துண்டுகளை வெட்டி கொள்ள வேண்டும்.* பின்பு ஒவ்வொரு துண்டையும் தனித்தனியாக மடித்து இதழாக மாற்ற வேண்டும்.
* இதழ் செய்ய முதலில் ஒவ்வொரு துண்டையும் தனித்தனியாக துண்டின் வலது, இடது புற முனைகள் தொடும் வகையில் மடிக்க வேண்டும். பின்னர் கீழ், மேல் முனைகள் இணையும் வகையில் மடிக்க வேண்டும். பின்னர் அதை சமமாக இடது, வலமாக மடிக்க வேண்டும். இரு முனைகளையும் வெளிப்புறமாக மடிக்க வேண்டும். இப்போது சிறியது முதல் பெரியது வரை வெவ்வேறு அளவுகளில் தனித்தனி இதழ்கள் தயாராகி இருக்கும்.
பூ :
* முதலில் 5 இஞ்ச் நீளமுள்ள கம்பியை எடுத்து கொள்ள வேண்டும். அதன் மேல் பகுதியை கொக்கி போல் வளைத்து, சிறிய இதழை அதில் சேர்க்க வேண்டும்.* பின்னர் அடுத்தடுத்த இதழ்களை ஒவ்வொன்றாக சுற்றியும் வைத்து ஒவ்வொரு இதழுக்கும் பச்சை நிற நூலால் கட்ட வேண்டும். இந்த 7 இதழ்களையும் கட்டி முடித்தால் பூ தயாராகும்.
* பூவின் கீழ் பகுதி முதல் கம்பி முழுவதும் கிரீன் பேப்பர் செல்லோ டேப்பால் சுற்றினால் கம்பி பச்சை நிற காம்பாக தோற்றமளிக்கும். இப்போது காம்போடு கூடிய முழுமையான பூ தயாராகும்.
* பின்பு பொக்கே கோனில் கிரீன் கிராப்பை கொத்தாக சொருகி, அதன் மேல் பூவை செருகினால் செயற்கை ரோஸ் பொக்கே தயாராகிவிடும்.
* இதனை விற்பனை செய்வதன் மூலம் அதிகப்படியான லாபம் பெற முடியும்.
கருத்துகள் இல்லை