திருவாதிரை நோன்பு (விரதம்) என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும்.
மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று (திருவாதிரை தரிசனம்) காட்சி தரும் கடவுளை கண்டு களித்தால் வீழ்ச்சியில்லாத வாழ்க்கை அமையும்.
திருவாதிரை தரிசனத்தை, ஆருத்ரா தரிசனம் என்றும் சொல்வார்கள்.
அன்றைய தினம் சகல சிவாலயங்களிலும் நடராஜருக்கு அபிஷேகம் செய்வதும், ரிஷப வாகனத்தில் ஈஸ்வரனும், ஈஸ்வரியும் திருவீதி உலா வருவதும் விழாவாக நடைபெறும்.
கருத்துகள் இல்லை