தீபாவளிக்கு மறுநாள் கேதாரகௌரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
சிவபெருமானிடம் இடப்பாகம் வேண்டி, பார்வதி தேவி இருந்த விரதமே கேதாரீஸ்வரர் விரதம் என்றும் பார்வதிக்கு, கௌரி என்ற இன்னொரு பெயர் இருப்பதால் கேதார கௌரி விரதம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம், சுக்ல பட்ச தசமி திதி முதல் ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்தசி அல்லது அமாவாசை வரையிலும் 21 நாட்கள் இந்த விரதமானது அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த விரதத்தை முறைப்படி கடைபிடித்து சிவபெருமானையும், பார்வதி தேவியையும் பூஜித்து வழிபடும் திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இனிமையான வாழ்வும், சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
மேலும் கணவன், மனைவிக்கிடையே உள்ள பிரச்சனைகள் குறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும்.
கருத்துகள் இல்லை