தேவையான பொருட்கள் :
* சேப்பங்கிழங்குகால் கிலோ
* ஓமம்அரை டீஸ்பு+ன்
* கடுகுஅரை டீஸ்பு+ன்
* மஞ்சள் தூள்அரை டீஸ்பு+ன்
* மிளகாய்த் தூள்1 டேபிள் ஸ்பு+ன்
* தனியாத் தூள்1 டேபிள் ஸ்பு+ன்
* உப்புதேவைக்கேற்ப
* எண்ணெய்தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் சேப்பங்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில்; எண்ணெய் ஊற்றி, சேப்பங்கிழங்கைப் போட்டு பொரித்தெடுக்கவும்.
கிழங்கு பொன்னிறமானதும் தனியாக எடுத்து வைக்கவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு மற்றும் ஓமத்தைப் போட்டு பொரிய விடவும்.
பொரிந்ததும் சேப்பங்கிழங்கைச் சேர்த்து, மிளகாய்த் தூள், தனியாத் தூள், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும். சுவையான சேப்பங்கிழங்கு கறி தயார்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சாதம், சாம்பாருடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
கருத்துகள் இல்லை