தேவையான பொருட்கள் :
* பீட்ரூட்கால் கிலோ
* கடலைப் பருப்பு அரை கப்
* தேங்காய்த் துருவல்கால் கப்
* பெரிய வெங்காயம் 1
* இஞ்சி பூண்டு விழுது1 டீஸ்புன்
* மிளகாய்த் தூள் 1 டேபிள் ஸ்புன்
* கொத்தமல்லி தழை1 கைப்பிடி அளவு
* உப்பு தேவைக்கேற்ப
தாளிக்க
* எண்ணெய் - தேவைக்கேற்ப
* கடுகு - அரை டீஸ்பூன்
* பெருங்காயம் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை :
குக்கரில் பீட்ரூட்டைத் தனியாக வேக வைக்கவும். அமுத்து கடலைப் பருப்பு, உப்பு இவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, 2 விசில் விட்டு இறக்கவும்.
பின்னர் தேங்காய் துருவலை அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளிக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு பேஸ்டை சேர்த்து வதக்கவும்.
பிறகு வெங்காயம் மற்றும் வேகவைத்த பொருள்களை சேர்த்து நன்றாக வதக்கவும். மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
அரைத்த தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறி, நன்றாக கொதிக்கவிட்டு இறக்கவும். கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி சேர்த்து இறக்கிவிடவும். இப்பொழுது சூடான பீட்ரூட் கடலைப்பருப்பு கூட்டுத் தயார்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இது சப்பாத்தி மற்றும் தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
கருத்துகள் இல்லை