* மாவட்டம் : கோயம்புத்தூர்

           * இடம்    : உப்பிலிபாளையம்

           * முகவரி  : அவினாசி சாலை, உப்பிலிபாளையம் கோயம்புத்தூர்- 641 018.

           * தாலுகா    : கோயம்புத்தூர் தெற்கு

வரலாறு  : 

              கோவை மாநகரில் அவினாசி நெடுஞ்சாலையில் வடக்கு நோக்கி இந்த இறைவியின் திருக் கோவில் அமையப் பெற்றுள்ளது. கொங்கு நாட்டு கோட்டைகளில் முக்கியமானதாக விளங்கிய கோயம்புத்தூர் கோட்டை 1768 லிருந்து 1791 ஆம் ஆண்டு வரை மூன்று தடவை முற்றுகையிடப்பட்டது. ஆங்கிலேய படைகளுடன் திப்பு சுல்தான் படைகள் மும்முரமாக மோதிக் கொண்டிருந்த சமயம் இதில் கலந்து கொள்ள மைசூர் படைகளும் வந்து சேர்ந்து இருந்தன. மைசூரிலிருந்து வந்த படைகளுடன் ஒரு படைக்கலமாக இந்த அம்மனின் லிங்க வடிவத்திலான உருவமும் கலந்து கொண்டு வந்து சேர்ந்து விட்டது. போர் முடிந்து புறப்படும் போது இந்த லிங்கத்தை எடுத்து சென்று விட்டனர். ஆனால் அங்கு சென்று பார்த்தால் இந்த லிங்கம் மாயமாய் மறைந்து விட்டது. மறுபடியும் இங்கு வந்து பார்த்தபோது மாரியம்மன் இங்கேயே குடியமர்ந்திருக்கின்ற அபூர்வம் அவர்களுக்கு புலப்பட்டிருக்கிறது. இதை எடுத்த செல்ல முயன்றும் அவர்களால் முடியவில்லை.

              படைக்கலன்களுக்கு தண்டு என்று பொருள் அதனாலேயே தண்டுமாரியம்மன் எனும் பெயர் நிலைபெயராகிவிட்டது. ஒவ்வாரு ஆண்டும் சித்திரை மாத்தின் முதல் செவ்வாய் கிழமை தொடங்கி 13 நாட்களுக்கு பிரம்மாத்சவமும், ஆண்டு திருவிழாவும் நடைபெற்று வருகிறது. அது தவிர வருடத்தின் முக்கிய தினங்களில் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.

தண்டு மாரியம்மன் கோவில் சுற்றுலா தலம்

கருத்துகள் இல்லை