* மாவட்டம் : திருச்சிராப்பள்ளி
* இடம் : குமாரவயலூர்
* முகவரி : குமாரவயலூர், திருச்சிராப்பள்ளி
* தாலுகா : திருச்சிராப்பள்ளி
வரலாறு :
இப்பகுதியில் வேட்டையாட வந்த சோழ மன்னன் ஒருவர் தண்ணீர் தாகம் எடுத்து நீருக்கு அலைந்து இப்போது கோயில் இருக்கும் இடத்துக்கு வரும் போது மூன்று கிளைகளாக வளர்ந்த கரும்பு ஒன்றை கண்டு அதனை ஒடித்து தாகம் தீர்க்க எண்ணி கரும்பை ஒடித்த போது அதிலிருந்து இரத்தம் கசிந்தது.
அவ்விடத்தை தோண்டிப்பார்த்த போது சிவலிங்கம் இருந்ததாகவும் பின்னர் கோயில் எழுப்பியதாகவும் கர்ண பரம்பரை செய்தி கூறுகின்றது. திருவண்ணாமலை கோபுரத்திலிருந்து கீழே விழுந்த அருணகிரி நாதரை காப்பாற்றி முத்தை திரு என்று அடி எடுத்துக் கொடுத்த முருகப்பெருமான் வயலூருக்கு வா என்று அழைக்க இங்கு வந்து தான் முருகப்பெருமானை அருணகிரியார் பொய்யாகணபதியை வணங்கி கண்டு கொண்டார்.
அருணகிரி நாதருக்கு தன் வேலால் ஒம் என்ற பிரணவ மந்திரத்தை முருகப்பெருமான் எழுதினார். திருப்புகழின் பெருமையில் வயலூர் முருகனுக்கு தனிச்சிறப்பு உண்டு. கிருபானந்த வாரியாரின் தனிப்பட்ட ஈடுபாட்டின் காரணமாக உலகப் புகழ்பெற்ற கோயிலாக இன்று இக்கோயில் திகழ்கிறது.
கருத்துகள் இல்லை