* மாவட்டம் : திருநெல்வேலி
* இடம் : கடையநல்லூர்
* முகவரி : கடையநல்லூர், திருநெல்வேலி
* தாலுகா : தென்காசி
வரலாறு :
குருக்ஷேத்திரப்போரில் வெற்றி பெற்ற அர்ஜுனன், வீரர்களைக் கொன்ற தோஷம் நீங்குவதற்காக பொதிகை மலைக்கு சென்று, தாமிரபரணியில் நீராடி பாவம் போக்கிவிட்டு, படைகளுடன் திரும்பிக் கொண்டிருந்தார். அவர் இத்தலம் அருகே வந்தபோது, ஒரு மருத மரத்தின் அடியில் சற்று நேரம் ஓய்வு எடுத்தார். அப்போது, மகா விஷ்ணு அவனது கனவில் தோன்றி, "தான் மருதமரத்தின் அருகில் ஓரிடத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டி, அவ்விடத்தில் இருக்கும் தன்னை வணங்கினால், பாவம் முழுமையாக நீங்கி விமோசனம் கிடைக்கும்'' என்றார்.
விழித் தெழுந்த அர்ஜுனன், மகாவிஷ்ணு கூறிய இடத்திற்கு சென்றபோது, பெருமாள் தாயார்களுடன் சிலை வடிவில் இருந்ததைக் கண்டார். அவரை வழிபட்ட அர்ஜுனன், அந்த சுயம்பு மூர்த்திகளை (தானாகத் தோன்றியவை) பிரதிஷ்டை பூஜை செய்து வணங்கினார். பிற்காலத்தில், இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் இவ்விடத்தில் கோயில் எழுப்பினார்.
கருத்துகள் இல்லை