வீடுகட்டும் முன் - மறுவிற்பனை பிளாட் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்

                 * வேறு ஒருவர் வாங்கி வைத்து இருந்த நிலம் விற்பனைக்கு வந்தால் அதை நீங்கள் வாங்க முற்பட்டால் இன்னும் சில விஷயங்களையும் துல்லியமாக ஆராய வேண்டும்.

                 * அவர் ஏன் இந்த மனையை விற்கிறார்? அதாவது என்ன காரணத்திற்காக விற்கிறார் என்பதை கட்டாயம் விசாரிக்க வேண்டும். எதாவது பிரச்சனைகள் இருந்து நம்மிடம் அதை மறைத்து விற்பனை செய்கிறார்களா என்பது பற்றிய தகவல்களை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.

                 * வில்லங்கங்கள் ஏதும் உள்ளதா என்பதை நன்கு தெளிவு படுத்தி கொள்ள வேண்டும் .

                 * வாரிசுதாரர்கள் அனைவரின் முன்னிலையில் நிர்ணயிக்கப்பட்ட விலை மற்றும் முன்தொகை விபரங்களை தெரியபடுத்திட வேண்டும்.

                 * பக்கத்து வீட்டுக்காரர்களின் எல்லை அளவுகளை அவர்களிடம் காட்டி தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

                 * ஒரு வேலை பொது சுவர்கள் ஏதும் இருப்பின் அதற்கான உடன்படிக்கை ஆவணங்களை கட்டாயம் கேட்டு வாங்க வேண்டும். அதை சம்பந்தப்பட்ட பக்கத்து வீட்டுக்காரரிடம் காட்டி உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

                 * குறைந்தது 30 வருடங்களுக்கான தாய் பாத்திரங்களை கட்டாயம் கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும்.

                 * ஏற்கனவே வீடு இருந்து அதை வாடகைக்கோ அல்லது ஒத்திக்கோ வீட்டு உரிமையாளர் விட்டு இருந்தால் அவர்களிடம் பேசி அவர்கள் காலி செய்து கொடுக்க சம்மதப் பத்திரம் பெற வேண்டும்.

                 * அதேபோல அந்த சொத்தின் மேல் அடமானத்தின் பேரில் கடன் வாங்கிக் கட்டி முடித்திருந்தாலோ அது சம்மந்தமான திரும்பப் பெற்ற அனைத்து ஆவனங்களையும் கேட்டுப் பெற்று சரி பார்த்துக் கொள்வதுடன் ஒரு வழக்கறிஞர் மூலமாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தெளிவுபடுத்திக் கொள்வது மிக நன்று.

                 * மேலும் நிலத்தின் உரிமையாளர் சம்பந்தமான அத்துனை வாரிசுகளையும் அழைத்துப் பேசி வில்லங்கம் சம்பந்தமான ஒப்புதல் பெற வேண்டும். வாரிசுகள் மைனர்களாக இருப்பின் அவர்கள் மூலமாக பின்னாளில் எந்த வித வில்லங்கங்களும் வராமல் இருக்கத் தேவையான அனைத்து ஒப்புதல்களும் பெறவேண்டும்.

மறுவிற்பனை பிளாட் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்

கருத்துகள் இல்லை