வீடுகட்டும் போது - வீடு கட்ட கட்டிட பொறியாளர் (சிவில் இஞ்சினியர்) அனுமதி அவசியமா?
ஒரு அனுபவம் உள்ள பொறியாளரை ஒரு வீடு, வணிகக்கடை, தொழிற்சாலை கட்டிடம் கட்ட அணுகினால், கட்டிட வரைபடம் உங்கள் விருப்பம், தற்போதைய மற்றும் பிற்காலத் தேவையை கருத்தில் கொண்டு இன்றைய நவீன காலத்திற்கும் அரசு விதிகளுக்கும், நமது கலாச்சாரமும் வாஸ்து வடிவமைப்பும் பொருந்தும் வண்ணம் உங்கள் மனையின் நீள அகலம் ஆகியவை மற்றும் அந்தப்பகுதி நில அமைப்பு மற்றும் பிற்கால வளர்ச்சியையும் அடங்கும் வடிவத்தில் வரைபடம் தயாரித்துக் கொடுப்பார்.
வீடு கட்டுவதற்கான திட்டம் மற்றும் வடிவமைப்பு, கண்காணிப்பு, தரக் கட்டுப்பாடு, திட்ட அனுமதியின்படி கட்டுமானம் நிறைவு பெற்றிருப்பதை உறுதி செய்தல் ஆகியவற்றை பதிவு பெற்ற என்ஜினீயர்கள் தான் செய்ய வேண்டும். மேலும், 12 மீட்டர் உயரத்துக்குள் அமைந்த கட்டிடங்களுக்கு பதிவு பெற்ற கட்டிடக் கலை நிபுணர் (Registered Architect) அல்லது பதிவுபெற்ற பொறியாளர் (Registered Engineer) அனுமதி அவசியம்.
12 மீட்டருக்கு மேல் 18 மீட்டர் உயரத்துக்குள் அமைந்த கட்டுமானங்களை அமைக்க பதிவு பெற்ற டெவலப்பரின் அனுமதி வேண்டும். மேலும், ஸ்டக்சுரல் என்ஜினீயர், கன்ஸ்ட்ரக்ஷன் என்ஜினீயர், ஜியோ டெக்னிக்கல் என்ஜினீயர் ஆகியோர்களது அனுமதியும் அவசியம்.
ஒரு கட்டிடத்தில் Structural Design செய்து வலிமை, பாதுகாப்பு மற்றும் செலவு குறைவான வடிவமைப்பில் கொடுப்பது ஒரு பொறியாளர் பணியாகும். எவ்வளவு அனுபவம் இருந்தாலும்கூட பொறியாளர் வாய்மொழியில் எவ்வளவு கான்கிரிட் மற்றும் கம்பியின் தேவை எவ்வளவு என்று சொல்ல கூடாது. கட்டிட வரைபடம் அதன் பயன்பாடு, அங்குள்ள மண்ணின் தரம் அனைத்தையும் கருத்தில்கொண்டு வடிவமைப்பு கணக்கிடு செய்து Structural வரைபடம் கொடுக்க வேண்டும்.
இன்று சந்தையில் ஒரே தேவைக்குப் பல நிறுவனங்களைச் சார்ந்த பொருட்கள் கிடைக்கின்றன. நம்முடைய தேவை என்ன, எப்படிப்பட்ட அடிப்படை விஷயங்களை அவை பூர்த்திசெய்ய வேண்டும், நம்முடைய பொருளாதாரச் சூழல் என்ன, தேவையான தரக்கட்டுப்பாட்டு வழிமுறைகளை எந்தப் பொருள் நிறைவேற்றுகிறது என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்குப் பிறகுதான் நாம் அந்தப் பொருளை வாங்க வேண்டும். இந்தச் சூழலில் பொறியாளர் ஒருவரின் தேவை அவசியமானது.
ஒரு கட்டிடத்தை கட்டிமுடிக்க எவ்வளவு ஆட்கள், கட்டுமான பொருட்கள், உபகரணங்கள் எவ்வளவு செலவு ஆகும் என்று கணக்கீடு செய்து திட்டத்தின் மொத்தசெலவு தொகை எவ்வளவு வரும் என்றும், இந்த கட்டிடத்தை கட்டிமுடிக்க எவ்வளவு நாட்கள் தேவை எப்பொழுது எவ்வளவு என்ன பொருட்கள் மற்றும் ஆட்கள் தேவை என்பதை எல்லாம் கணக்கீடு செய்வதில் பொறியாளரின் பங்கு மிகவும் அவசியமாகும்.
கட்டிடவேலை தொடங்கவும், தொடங்கியபின் வேலையை வழிநடத்தவும், வரைபடத்தில் உள்ளதை திட்டத்தின் செலவு தொகையில் மாற்றம் இல்லாமல் அந்த கட்டிடத்தின் கட்டுமான வேலையை பூர்த்திசெய்யவும், வேலைகளுக்கு இடையில் ஏற்படும் சிறுசிறு மாறுதல்கள் மற்றும் இடர்ப்பாடுகளை சரிசெய்தல், தரமான பொருட்களை தேவையான அளவு வாங்கவும், அந்த பொருட்களை சரியாக கொண்டுவந்து சேர்க்கவும் பொறியாளரின் திட்டமிடல் அவசியம்.
மிக பெரிய வணிக வளாகங்கள் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டடுவதற்கு கண்டிப்பாக பொறியாளர்கள் தேவை. ஏனெனில் இதனை கொஞ்சம்திறன் பட செய்ய வேண்டும்.
வீடு கட்டும் முன்பு உங்களுடைய பகுதியின் தட்ப வெட்ப சூழ்நிலை மண்ணின் தாங்கு திறன் இவை பற்றி நான்கு ஆய்வு செய்ய வேண்டும். ஏனெனில் நீங்கள் கட்டும் கட்டிடத்தை தாங்கும் அளவுக்கு தேவையான Concrete Reinforcement சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். இதனை துல்லியமாக கணக்கிட்டு கொடுக்கு பொறியாளர்கள் தேவைப்படுவார்கள்.
ஏனெனில் இந்த Concrete Reinforcement என்பது சரியான விகிதத்தில் இருக்க வேண்டும், நீங்கள் பொறியாளர்கள் இல்லாத நபர்களை கொண்டு கட்டினால் 50 வருடம் இருக்க வேண்டிய கட்டிடம் 30 வருடத்திலேயே பழுதாக ஆரம்பித்து விடும்.
கட்டிடத்தின் பாதிப்பு என்பது உடனே நமக்கு தெரிய வராது. குறைந்தது 5 முதல் 10 வருடங்களில் இருந்து நீங்கள் பாதிப்பை உணர முடியும். ஆகவே இந்த மாதிரியான கட்டிடம் கட்டுவதில் சரியான பொறியாளர்களை தேர்தெடுத்து வீடு கட்ட வேண்டும்.
வீடு கட்டும் முன்பு architect ஒருவரை அழைத்து வீடு கட்ட போகும் இடம் மேலும் உங்களிடம் அதற்காக உள்ள பட்ஜெட் மேலும் வீடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை கூறினால் அவர் அதற்கு தகுந்தாற்போல் உங்களுக்கு வரைபடம் உருவாக்கி தருவார். ஒரு சில பொறியாளர்கள் அவர்களாகவே இந்த வரைபடத்தை வரைந்து கொடுப்பார்கள்.
இது உங்களுடைய வீடு எவ்வளவு பளுவை தாங்கும் அதற்கு எவ்வளவு கம்பி எந்த அளவில் பயன்படுத்த வேண்டும் என்பதை முன்கூட்டியே சொல்ல கூடிய வரைபடம். இதை நீங்கள் ஒரு Structural Consultant மூலமாக பெற்று கொள்ளுங்கள்.
இந்த இரு வகையான வரைபடம் இல்லாமல் வரும் எந்த பொறியாளரையும் நீங்கள் உங்களுடைய வீட்டை கட்ட அனுமதிக்காதீர்கள். இந்த இரு வரைபடமும் மிகவும் முக்கியம்.
நமது பழங்கால முறை, அதாவது பெரிய வகை கற்களை கொண்டு அஸ்திவாரம் அமைத்து பின்பு அதன் மேல் சுவர் எழுப்பி இறுதியில் கூரையில் Concrete அமைப்பது. இவை இப்பொழுது பெரும்பாலும் கட்ட படுவதில்லை. ஆனால் இது தரமானது அல்ல என பலரும் கூறுவது உண்மையல்ல. நீங்கள் இந்த அமைப்பை பயன்படுத்தி 3 அடுக்கு மாடி வரை கட்டலாம். இது மாதிரியான கட்டிடத்திற்கு பெரிய வகையில் பொறியாளர்கள் தேவை இல்லை. உங்களுக்கு தெரிந்த கொத்தனாரை கொண்டே இது போன்ற வீட்டை கட்டி முடிக்கலாம்.
கருத்துகள் இல்லை