அகத்தி இலை,முருங்கை இலை,பாகற்காய் இவற்றின் சாறுகளில் ஏதேனும் ஒன்றை வெறும் வயிற்றில் 4 நாட்கள் தொடர்ந்து அரை டம்ளர் பருக அனைத்து பூச்சிகளும் அகலும்.

குப்பைமேனி இலையை கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

அகத்திக்கீரை சாற்றை எடுத்து குடிக்க வைத்துப் பூச்சிகளை நீக்கலாம்.

விளக்கெண்ணெய்,வேம்பு தைலம், தேங்காயெண்ணெய் மூன்றினையும் சம அளவைக் கலந்து காலை மாலை வயதிற்கேற்றார் போல 5 முதல் 10 வரை உள்ளுக்குக் கொடுத்து வயிற்றில் உள்ள கிருமிகளைக் கொல்லலாம்.

வேப்பிலை கொழுந்துடன் சிறிது உப்பை சேர்த்து அரைத்து சுண்டைக்காயளவு உருண்டைகளாக்கி இரண்டு உருண்டைகளை வெறும் வயிற்றில் சாப்பிடக் கொடுக்கவும் பூச்சிகள் செத்து வெளியில் வந்துவிடும்.

முற்றிய வேப்பிலை 25 கிராம், குப்பைமேனி இலை 25 கிராம் இரண்டை யும் தேவையான அளவு தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து இரவில் குடிக்க வைத்தால் புழுக்கள் முழுவதும் வெளியேறிவிடும்.

நிலவேம்பு இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து காலை வேளையில் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் குறையும்

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே வசம்பைச் சுட்டுப் பொடியாக்கித் தேனில் குழைத்துக் குழந்தையின் நாக்கில்தடவி கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுக்குக் கொடுத்தால் வயிற்றில் பூச்சிகள் எளிதில் இறந்து விடுகின்றன.

சிறு குழந்தைகள் இனிப்பு வகைகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதால் பூச்சிகள் உண்டாகும். இதற்கு ஒரு எளிய வைத்தியம். தித்திப்பு மாதுளையை முதல் நாள் சாப்பிடக் கொடுத்து மறுதினம் பாலில் சிறிது விளககெண்ணையைக் கலந்து கொடுத்தால் பூச்சிகள் வெளியேறும்.

கொட்டைப் பாக்கை சந்தனம் போல் இழைத்து சுமார் ஒரு ஸ்பூன் அளவு காலை வெறும் வயிற்றில் சிறிது பாலில் அல்லது தண்ணீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, குடல் பூச்சிகள் மொத்தமும் அன்றே வெளிவரும். கடும் பத்தியம் கிடையாது குழந்தைகளின் வயதுக்கேற்ப அளவைக் கூட்டியோ குறைத்தோ கொடுக்கலாம்.

கொக்கிப் புழுக்கள் தொந்தரவிலிருந்து விடுபட, துளசிச் சாற்றுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்து வரவும் தினமும் சில இலைகளை மென்று வந்தாலே புழுக்கள் வெளியேறும்.

வேப்பிலைக் கொழுந்துடன் சிறிது உப்பை சேர்த்து மையாக அரைத்து சுண்டைக்காய் அளவு உருண்டைகளாக்கி இரண்டு உருண்டைகளை (ஒரு குழந்தைக்கு) வெறும் வயிற்றில் சாப்பிடச் செய்யவும் பூச்சிகள் செத்து வெளியில் வந்துவிடும்.

முதல் நாள் மாலையில் இரண்டு கடுக்காய்களை எடுத்து பொடி செய்து அதனுடன் இருபத்தைந்து உலர்ந்த திராட்சைகள், கறிவேப்பிலை உருவிய ஈர்க்குகள் பத்து ஆகியவைகளை நசுக்கிப் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீரை ஊற்றி ஊற வைத்துக் கொள்ளவேண்டும். மறுநாள் காலையில் ஊற வைத்த தண்ணீரை வடிகட்டி, அதில் அரை டம்ளர் எடுத்து காலையில் சாப்பிட வேண்டும். மூன்று மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் அரை டம்ளர் சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டு வந்தால் ஒன்று அல்லது இரண்டு முறை பேதியாகி வயிற்றுப் பூச்சிகள் குறையும்.

வேப்பிலைச் சாற்றுடன் 1 கரண்டி அளவு தேனைச் சேர்த்து கலக்கி தினமும் இரு வேளை காலை மாலை அருந்திவர வயிற்றுப் பூச்சிகள் அகலும்.

வேப்பங்குச்சிகளை கொண்டு பல் துலக்கி வர பல்லில் உள்ள கிருமிகள் அழிவதோடு வயிற்றில் உள்ள கிருமிகளும் அகலும் வேப்பிலையைத் தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கவும். இக்கஷாயத்தைப் பருகிவர வயிற்றுப்பூச்சிகள் அகலும். கெட்ட துர்நீர் சிறுநீருடன் வெளிவரும். அல்லது வாரம் ஒரு முறை துத்தி இலைச் சாற்றைக் குடிக்கலாம். 

வயிற்று பூச்சிகள் அகல

கருத்துகள் இல்லை