வீட்டு விஷேசங்களிலும், கோவில்களில் நடைபெறும் பூஜைகளிலும் வெற்றிலைக்கு முக்கியப் பங்கு உண்டு. நாட்டு மருத்துவத்திலும் வெற்றிலை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படிப் பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிலையை சாகுபடி செய்வதன் மூலம் நாமும் இலாபம் அடையலாம்.
* கடுமையான வெயில் அடித்தால் வெற்றிலைக் கொடி கருகிவிடும். காற்று பலமாக வீசினாலும் கொடி சேதமடைந்துவிடும். அதனால் கொடி நன்கு வளர்ந்து அகத்தி மரத்தின் மீது படரும்வரை, வெற்றிலை தோட்டத்தைச் சுற்றிச் சூரிய ஒளி மற்றும் காற்று புகாதவாறு தென்னங்கீற்றால் வேலி அமைக்க வேண்டும்.
* ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 120 நாட்கள் கழித்துப் பறிக்க தொடங்கிவிடலாம். மூன்று ஆண்டுகள்வரை 30 நாட்களுக்கு ஒருமுறை பறித்துக்கொண்டே இருக்கலாம். நோய் தாக்காமல் இருக்க, ஒவ்வொரு முறை பறித்த பின் பூச்சிக்கொல்லி தெளிக்க வேண்டும்.
* அகத்தி மரம் வளர்ந்த பின் அகத்திக் கீரையை வெட்டி வெற்றிலை கொடிக்கு உரமாக இடலாம். அது மண்ணில் மக்கி இயற்கை உரமாக மாறிவிடும். மேலும் ஊடுபயிராக வாழை, பச்சை மிளகாய் சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கரில் நடவு செய்த பின் 30 நாட்களுக்கு ஒருமுறை ஆயிரத்து 500 கிலோ வரை வெற்றிலை பறிக்க முடியும்.
* நாம் சாகுபடி செய்த வெற்றிலையை நமது ஊரில் உள்ள சிறிய மற்றும் பெரிய கடைகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்வதன் மூலம் நிறைவான இலாபம் அடையலாம்.
வெற்றிலையின் வகைகள் :
வெற்றிலையில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று கருப்பு வெற்றிலை. மற்றொன்று வெள்ளை வெற்றிலை. வெள்ளை வெற்றிலையானது வெளிர்ப்பச்சையாகவும், காரம் இல்லாமலும் இருக்கும். கருப்பு வெற்றிலையானது அடர் பச்சை நிறமாகவும், நல்ல காரம் உள்ளதாகவும் இருக்கும். இந்த வெற்றிலை சற்று பெரிதாகவும் இருக்கும். மேலும், இது மருத்துவ குணம் வாய்ந்ததாகவும் உள்ளது.வளர்ப்பு முறை :
அனைத்துச் சூழ்நிலையிலும் வெற்றிலையானது எளிதில் வளராது. குளுமையான சூழ்நிலையில் மட்டும் தான் வளரும். வெற்றிலை சாகுபடிக்குக் கரம்பை மண் ஏற்றது. வெள்ளை வெற்றிலை சாகுபடிக்கு நல்ல தண்ணீர் மட்டுமே தேவைப்படும். ஆனால், கருப்பு வெற்றிலைக்கு உப்பு தண்ணீரே போதும். ஆகையால், கருப்பு வெற்றிலையே சாகுபடி செய்ய சிறந்தது.சாகுபடி முறைகள் :
* முதலில் அகத்தி விதையை விதைத்துச் செடி வளர்க்க வேண்டும். 60 நாட்கள் கழித்துச் செடி சுமார் அரை அடி உயரம்வரை வளர்ந்த பின், வெற்றிலை கொடி பதியம் போட்டு ஒவ்வொரு அகத்திச் செடிக்கும் ஒரு அடி இடைவெளியில் இயற்கை உரம் இட்டு நடவு செய்ய வேண்டும்.* கடுமையான வெயில் அடித்தால் வெற்றிலைக் கொடி கருகிவிடும். காற்று பலமாக வீசினாலும் கொடி சேதமடைந்துவிடும். அதனால் கொடி நன்கு வளர்ந்து அகத்தி மரத்தின் மீது படரும்வரை, வெற்றிலை தோட்டத்தைச் சுற்றிச் சூரிய ஒளி மற்றும் காற்று புகாதவாறு தென்னங்கீற்றால் வேலி அமைக்க வேண்டும்.
* ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 120 நாட்கள் கழித்துப் பறிக்க தொடங்கிவிடலாம். மூன்று ஆண்டுகள்வரை 30 நாட்களுக்கு ஒருமுறை பறித்துக்கொண்டே இருக்கலாம். நோய் தாக்காமல் இருக்க, ஒவ்வொரு முறை பறித்த பின் பூச்சிக்கொல்லி தெளிக்க வேண்டும்.
* அகத்தி மரம் வளர்ந்த பின் அகத்திக் கீரையை வெட்டி வெற்றிலை கொடிக்கு உரமாக இடலாம். அது மண்ணில் மக்கி இயற்கை உரமாக மாறிவிடும். மேலும் ஊடுபயிராக வாழை, பச்சை மிளகாய் சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கரில் நடவு செய்த பின் 30 நாட்களுக்கு ஒருமுறை ஆயிரத்து 500 கிலோ வரை வெற்றிலை பறிக்க முடியும்.
* நாம் சாகுபடி செய்த வெற்றிலையை நமது ஊரில் உள்ள சிறிய மற்றும் பெரிய கடைகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்வதன் மூலம் நிறைவான இலாபம் அடையலாம்.
கருத்துகள் இல்லை