கிழங்கு வகைகளில் உருளைக்கிழங்குக்கு அடுத்தபடியாக சுவையையும், சத்துக்களையும் கொண்டது சேப்பங்கிழங்காகும்.
* இந்த சேப்பங்கிழங்கிற்கு சந்தையில் எப்போதும் நல்ல வரவேற்பு உள்ளதால், அதிக லாபம் தரும் பயிர்களில் ஒன்றாகும். இப்போது இந்த சேப்பங்கிழங்கு சாகுபடி முறையை பற்றி இங்கு காண்போம்.
* பத்து நாட்களுக்கு பிறகு நிலத்தில் முளைத்து வரும் களைகளை மடக்கி உழவு மேற்கொண்டு, நிலத்தை சமப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.
* 50 நாட்கள் கழித்து செடிகளை மையமாக வைத்து கரைகளை பிரித்து கட்ட வேண்டும். அதன் பிறகு 300 கிலோ எருவுடன் கலப்பு உரத்தைக் கலந்து செடிகளுக்கு பரப்பிவிட வேண்டும். பின்னர் மாதம் ஒரு முறை 5 கிலோ சூடோமோனஸ் கலவையைத் துணியில் கட்டி பாசன நீர் செல்லும் வாய்க்காலில் வைக்க வேண்டும்.
* 70 நாட்கள் கழித்து ஒரு ஏக்கருக்கு 100 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் வீதம் பஞ்சகவ்யாவைக் கலந்து செடிகளின் மீது தெளிக்க வேண்டும். இந்த பயிர்களில் அதிக பூச்சிகள் மற்றும் நோய்கள் அதிகளவில் தாக்குவதில்லை. கற்பூர கரைசல் தொடர்ந்து செடிகளுக்கு தெளிப்பதனால் அனைத்து வித நோய் தாக்குதலில் இருந்தும் பாதுகாக்கலாம்.
* சேப்பங்கிழங்கு பயிரிட்ட நிலத்தை ஈரமாக இருக்குமாறு பார்த்து கொள்ளவேண்டும். அதே நேரத்தில் பயிரிடப்பட்டுள்ள நிலத்தில் அதிகளவில் நீர் தேங்க விடக்கூடாது.
* இந்த சேப்பங்கிழங்கிற்கு சந்தையில் எப்போதும் நல்ல வரவேற்பு உள்ளதால், அதிக லாபம் தரும் பயிர்களில் ஒன்றாகும். இப்போது இந்த சேப்பங்கிழங்கு சாகுபடி முறையை பற்றி இங்கு காண்போம்.
எந்த வகை நிலத்தில் சாகுபடி செய்யலாம் :
* சேப்பங்கிழங்கின் சாகுபடி காலமானது 6 மாதங்கள் ஆகும். இந்த கிழங்கினை களிமண் தவிர எல்லா வகை மண்ணிலும் சாகுபடி செய்யலாம். சேப்பங்கிழங்கு நடவு செய்வதற்கு தை பட்டம் மற்றும் வைகாசி பட்டம் ஏற்றதாகும்.நிலத்தை தயார் செய்யும் முறை :
* சேப்பங்கிழங்கு பயிரிட தேர்வு செய்யப்பட்ட நிலத்தில் ஒரு ஏக்கருக்கு 10 டன் என்ற கணக்கில் தொழு உரத்தைக் கொட்டி உழவு மேற்கொள்ள வேண்டும். அதன் பிறகு 10 நாட்கள் வரை நிலத்தை ஆறப்போட வேண்டும்.* பத்து நாட்களுக்கு பிறகு நிலத்தில் முளைத்து வரும் களைகளை மடக்கி உழவு மேற்கொண்டு, நிலத்தை சமப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.
விதை நடவு செய்யும் முறை :
* சேப்பங்கிழங்கு நடவு செய்வதற்கு ஒரு ஏக்கர் நிலத்தினை உழுது 2 அடி உயரத்திற்கு பார் அமைத்துக்கொள்ள வேண்டும். பிறகு தண்ணீர் கட்டிய பாத்தியில் முக்கால் அடி இடைவெளி விட்டு ஒவ்வொரு விதைக்கிழங்காக நடவு செய்ய வேண்டும். இவ்வாறு நடவு செய்யும் போது ஒரு ஏக்கருக்கு 500 கிலோ அளவில் விதைக்கிழங்குகள் தேவைப்படும்.விதை நேர்த்தி செய்யும் முறை :
* அறுவடை செய்த சேப்பங்கிழங்களை சேகரித்து இரண்டு மாதங்கள் நிழலில் காய வைக்க வேண்டும். அதன் பிறகு சேகரித்து வைத்துள்ள கிழங்குகளை 200 லிட்டர் தண்ணீரில் 3 கிலோ சூடோமோனஸ் கலந்து நடவுக்காக எடுத்து வைத்துள்ள 500 கிலோ விதைக்கிழங்குகளை 10 நிமிடங்கள் வரை ஊறவைத்து விதை நேர்த்தி செய்து நடவு செய்ய வேண்டும்.பாரமரிப்பு முறைகள் :
* சேப்பங்கிழங்கு நடவு செய்த 7 நாட்களில் வேர்பிடித்து வளரும். இந்த சேப்பங்கிழங்கு பயிர்களுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுவதால் 3 முதல் 4 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். 25 நாட்கள் கழித்து வயல்களில் களை எடுக்க வேண்டும்.* 50 நாட்கள் கழித்து செடிகளை மையமாக வைத்து கரைகளை பிரித்து கட்ட வேண்டும். அதன் பிறகு 300 கிலோ எருவுடன் கலப்பு உரத்தைக் கலந்து செடிகளுக்கு பரப்பிவிட வேண்டும். பின்னர் மாதம் ஒரு முறை 5 கிலோ சூடோமோனஸ் கலவையைத் துணியில் கட்டி பாசன நீர் செல்லும் வாய்க்காலில் வைக்க வேண்டும்.
* 70 நாட்கள் கழித்து ஒரு ஏக்கருக்கு 100 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் வீதம் பஞ்சகவ்யாவைக் கலந்து செடிகளின் மீது தெளிக்க வேண்டும். இந்த பயிர்களில் அதிக பூச்சிகள் மற்றும் நோய்கள் அதிகளவில் தாக்குவதில்லை. கற்பூர கரைசல் தொடர்ந்து செடிகளுக்கு தெளிப்பதனால் அனைத்து வித நோய் தாக்குதலில் இருந்தும் பாதுகாக்கலாம்.
* சேப்பங்கிழங்கு பயிரிட்ட நிலத்தை ஈரமாக இருக்குமாறு பார்த்து கொள்ளவேண்டும். அதே நேரத்தில் பயிரிடப்பட்டுள்ள நிலத்தில் அதிகளவில் நீர் தேங்க விடக்கூடாது.
கருத்துகள் இல்லை