பெரும்பாலானவர்கள் தேடித்தேடி விதைப்பது, குறுகிய காலத்தில் வருமானம் கொடுக்கும் பயிர்களைத்தான். அந்த வகையில், முலாம்பழம் குறுகிய காலத்தில் நல்ல வருமானம் கொடுக்கும் பயிர்களில் ஒன்றாக இருக்கிறது. இத்தகைய லாபம் கொடுக்கும் பயிரான முலாம்பழம் சாகுபடியை பற்றி பார்போம்.

ஏற்ற பட்டம் :

                     * முலாம்பழச் சாகுபடிக்கு செடிப்பருவத்தில் பனி தேவை. விளையும்போது பனி இருக்கக்கூடாது. அதனால், இதற்கு மாசிப் பட்டம் ஏற்றது.

ஏற்ற மண் :

                       * முலாம்பழத்திற்கு செம்மண், மணல் கலந்த செம்மண், மணல் சாரியான மண் வகைகள் சிறந்தவை ஆகும்.

நிலத்தை தயார் செய்யும் முறை :

                          * சாகுபடி நிலத்தை மூன்று முதல் நான்கு முறை உழவு செய்து மண்ணை மிருதுவாக்க வேண்டும். பிறகு, ஒரு ஏக்கருக்கு 6 டன் தொழு உரம் அல்லது மாட்டு எருவைக் கொட்டி களைத்து விட வேண்டும். கடைசியாக, ரோட்டோவேட்டர் மூலம் உழுது நிலத்தை சமப்படுத்திக் கொண்டு வசதிக்கேற்ப பாசன வசதிகளைச் செய்து கொள்ள வேண்டும்.

விதை அளவு மற்றும் நடவு செய்யும் முறை :

                           * ஒரு ஏக்கருக்கு 200 முதல் 250 கிராம் விதை தேவைப்படும். வரிசைக்கு வரிசை இரண்டு அடி, செடிக்குச்செடி அரை அடி இடைவெளியில் கைகளால் குழி தோண்டி நீர் பாய்த்து மாலை நேரத்தில் நடவு செய்ய வேண்டும். பிறகு ஈரப்பதத்தை பொறுத்து பாசனம் செய்ய வேண்டும்.

உரமிடுதல் :

                       * விதைத்த 10-ம் நாள் முதல் வாரம் ஒரு முறை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்து விட வேண்டும்.
                       * பிறகு 25-ம் நாளில் கொடி படர ஆரம்பித்து, 30-ம் நாளில் பூவெடுக்க ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் அரப்பு மோர் கரைசல் கலந்து தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு ஏழு டேங்குகள் தேவைப்படும்.
                       * தலா ஒரு கிலோ வீதம் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயுடன், 100 கிராம் லவங்கம் பட்டையை அரைத்து கலந்து நான்கு லிட்டர் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அரை கிலோ புகையிலையை 2 லிட்டர் தண்ணீரில் ஒருநாள் முழுவதும் ஊறவைத்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு கரைசல்களையும் ஒன்றாகக் கலந்து 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் வீதம் 40-ம் நாளில் தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு ஆறு டேங்குகள் தேவைப்படும்.

பூச்சி தாக்குதல் :

                      * நடவு செய்த 6-ம் நாளில் விதைகள் முளைத்து, இரண்டு இலைகள் வெளியில் தெரிய ஆரம்பிக்கும். பூச்சித்தாக்குதல் 8-ம் நாளில் இருந்து தென்பட ஆரம்பிக்கும். இந்த சமயத்தில், ஒரு டேங்க் தண்ணீருக்கு (10 லிட்டர்) 100 மில்லி மீன் அமிலம், 100 மில்லி மூலிகைப் பூச்சிவிரட்டி ஆகியவற்றைக் கலந்து ஒரு ஏக்கருக்கு 5 டேங்குகள் வீதம் தெளிக்க வேண்டும்.
                      * 15 முதல் 20-ம் நாளுக்குள் தலா ஒரு கிலோ வீதம் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் எடுத்து இடித்து, 10 லிட்டர் தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைத்து, 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் கரைசல் கலந்து தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். இது பூச்சித்தாக்குதலைக் கட்டுப்படுத்தும், ஏக்கருக்கு பத்து டேங்குகள் தேவைப்படும்.

அறுவடை :

                       * முலாம்பழத்தின் வயது 65 முதல் 75 நாட்கள். 45 முதல் 55 நாட்களில் காய்கள் ஒரு கிலோ முதல் இரண்டு கிலோ அளவுக்கு வந்துவிடும். 60-ம் நாள் முதல் அறுவடை செய்யலாம். அடுத்து ஒரு வார இடைவெளியில் இரண்டு அறுவடைகள் செய்யலாம். ஏக்கருக்கு சராசரியாக 9 டன் அளவுக்கு மகசூல் கிடைக்கும்.

முலாம்பழம் சாகுபடி முறை

கருத்துகள் இல்லை