சேமியா, ஜவ்வரிசி, நூடுல்ஸ் போன்ற உணவுப் பொருள்களுக்கு தேவையான மூலப் பொருட்கள் மரவள்ளிக் கிழங்கிலிருந்து கிடைக்கின்றன. மேலும், மாத்திரைகளின் மேற்புறமானது மரவள்ளிக் கிழங்கிலிருந்து கிடைக்கும் ஸ்டார்ச்சு பவுடர் கொண்டே தயாரிக்கப்படுகிறது. பத்து மாத பயிரான மரவள்ளி ஒரு பணப்பயிர், மற்ற பயிர்களை விட பராமரிப்பு செலவு மிகவும் குறைவு. எனவே இதை விவசாயிகள் பயிர் செய்தால் நல்ல லாபம் பெறலாம்.

விதை நேர்த்தி :

                 * மரவள்ளி கிழங்கு அறுவடை செய்து ஒரு வாரத்திற்குள் உள்ள குச்சிகளை மட்டும் நடவு செய்ய வேண்டும். நல்ல திடமான மற்றும் காயாத குச்சிகளை தேர்வு செய்ய வேண்டும்.

நிலத்தை தயார் செய்யும் முறை :

                  * நிலத்தை மூன்று அல்லது நான்கு முறை உழவேண்டும், கடைசி உழவில் ஒரு ஏக்கருக்கு பத்து டன் தொழுஉரம் அல்லது இரண்டு டன் மண்புழு உரம் இட வேண்டும்.

நடவு செய்யும் முறைகள் :

                   * உழுத நிலத்தில் வட்டப்பாத்தி அமைத்து, அதில் மூன்று அடிக்கு, மூன்று அடி என்ற அளவில் மரவள்ளிக் கரணைக் குச்சிகளை செங்குத்தாக நடவு செய்ய வேண்டும். சொட்டுநீர் பாசனமாக இருந்தால் கடைசி உழவு செய்யும் போது சமமான தப்பை கொண்டு மண்ணை நிரவ வேண்டும், பின்பு மூன்று அடிக்கு, மூன்று அடி என்ற அளவில் குச்சிகளை நடவு செய்ய வேண்டும்.
                   * நிலத்தை ஈரமாக்கி அதன் பின் குச்சிகளை நடவு செய்ய வேண்டும்.
                   * நடவு செய்யும் போதே தனியாக ஒரு பாத்தியில் மரவள்ளி குச்சியை நாற்று விட வேண்டும், ஏனெனில் நடவு செய்த பின் வளராத குச்சிகளை ஒரு மாதத்திற்குள் மாற்ற வேண்டும், அப்போது நாற்று விட்ட குச்சிகளை எடுத்து வளராத குச்சிகளுக்கு பதிலாக நடவு செய்ய வேண்டும்.

நீர் மேலாண்மை :

                     * மற்ற பயிர்களை விட மரவள்ளி கிழங்கு சாகுபடிக்கு மிகவும் குறைந்த நீரே போதுமானது.
                     * நடவு செய்து பத்து நாட்கள் வரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். அதற்கு பின்பு வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதுமானது.
                     * இதை மானாவரியாகவும் பயிரிடலாம் அல்லது நீர் பாய்ச்சும் முறையிலும் பயிரிடலாம். நீர் பாசனத்துக்கு சொட்டுநீர் முறையை பயன்படுத்துவதாக இருந்தால் இன்னும் குறைந்த நீரே போதுமானது.

மரவள்ளி கிழங்கு சாகுபடி முறை

கருத்துகள் இல்லை