* இன்றைய காலகட்டத்தில் அனைத்து வணிக நடவடிக்கைகளும், உற்பத்தி துறையும் லாஜிஸ்டிக்கை மையமாக வைத்தே செயல்பட்டு வருகிறது. இந்த லாஜிஸ்டிக் தொழிலானது போக்குவரத்து துறையில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

லாஜிஸ்டிக் தொழிலின் நோக்கம்

                  * ஒரு பொருளை தேவையான நேரத்தில் தேவையான நபருக்கு சரியான நேரத்தில் கொண்டு சென்று கொடுப்பதுதான் லாஜிஸ்டிக்கின் நோக்கமாகும்.

                  * இந்த துறையில் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சரக்குகளை கையாளும் போது மிக நுட்பமான முறையில் அதிக கவனத்துடன் கையாள வேண்டும். அவ்வாறு செய்யும் போதுதான் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற முடியும்.

                  * தரைவழி போக்குவரத்து, கடல்வழி போக்குவரத்து, வான்வழி போக்குவரத்து, இரயில் போக்குவரத்து, பைப் லைன் போக்குவரத்து என லாஜிஸ்டிக்கில் பல வழிமுறைகள் உள்ளன.

தரைவழி போக்குவரத்து :

                    * தரைவழி போக்குவரத்து குறுகிய தூரத்திற்கான பொருட்களை கொண்டு செல்வதற்கு பயன்படுகிறது.

                    * இராணுவம், பெரிய தொழில் நிறுவனங்கள் போன்றவை தமது பொருட்களை கொண்டு செல்வதற்கு பெரும்பாலும் தரைவழி போக்குவரத்தையை தேர்வு செய்கின்றன.

                    * மிக அவசரமாக கொண்டு செல்லப்படும் பொருட்கள், அதிக விலை கொண்ட பொருட்கள் போன்றவற்றிக்கு வான்வழி போக்குவரத்து பயன்படுத்தப்படுகிறது.

                    * இரயில் போக்குவரத்தை சிமெண்ட், நிலக்கரி, இரும்புத்தாது, உரங்கள், பெட்ரோலியம், டீசல், பயிறு வகைகள், தானியங்கள் உள்ளிட்ட பொருட்களை ஏற்றி செல்வதற்கு பயன்படுத்துகின்றனர்.

கடல்வழி போக்குவரத்து :

                   * கடல்வழி போக்குவரத்து கனமான பொருட்களை கொண்டு செல்ல அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த போக்குவரத்தில் கொண்டு செல்லப்படும் பொருட்கள் குறிப்பிட்ட இடத்திற்கு போய் சேர்வதற்கான கால அளவு அதிகம் தேவைப்படுகிறது.

                   * எனவே பொருட்களின் தன்மை குறித்து முதலிலேயே தீர்மானித்துக் கொள்வது அவசியம்.

                   * பைப்லைன் எனப்படும் குழாய் வழி போக்குவரத்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு பொருட்களை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.

                   * இந்த போக்குவரத்து முறை அதிகம் செலவு பிடிப்பதால் இதை அரசுத் துறை மட்டும் கடைப்பிடிக்கிறது.

                   * லாஜிஸ்டிக்கில் பல்வேறு முறைகள் இருப்பதால் முறையாக திட்டமிட்டு ஒருங்கிணைத்து செயல்பட்டால் அதிக அளவில் லாபம் பெற முடியும்.

                   * இந்த துறையில் கணினியின் பயன்பாடு அதிகரித்திருப்பதால் தகவல் பரிமாற்றம் அதிகரித்துள்ளது. எந்த நிறுவனமாக இருப்பினும் அதன் வெற்றிக்கு லாஜிஸ்டிக் முக்கிய அம்சமாக திகழ்கிறது.
 
                   * எனவே இந்த துறையில் ஈடுபட்டு தொழில் செய்ய நினைப்பவர்கள் சரியான முறையில் சேவை செய்து உரிய நேரத்தில் டெலிவரி கொடுத்தால் அதிக வாடிக்கையாளர்களை பெற்று நிறைய லாபம் பெற முடியும்.

                   * மேலும் இத்தொழிலை மாநில அளவில் என்று இல்லாமல் தேசிய அளவு, சர்வதேச அளவு என விரிவுபடுத்தி ஏராளமாக சம்பாதிக்க முடியும்.

லாஜிஸ்டிக் தொழில்

கருத்துகள் இல்லை