ரோஜா பூக்கள் என்றால் நம் அனைவருக்கும் தெரியும். இது மருத்துவ குணம் நிறைந்தது. ஆனால், இன்று பெரும்பாலும் அந்தப் பூக்களை அழகுக்காகவே வளர்த்து வருகின்றனர். இந்தப் பூவில் இருக்கும் மருத்துவ பயன்கள் பற்றி பலருக்கு தெரியாது. அதேபோல், ரோஜா இதழ்களில் இருந்து தயாரிக்கப்படும் குல்கந்து பற்றியும் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. இன்றைய காலங்களில் குல்கந்து என்பது கடைகளில் மட்டும் கிடைக்கும் மருந்து பொருளாகவே மாறிவிட்டது. ஆனால், இதை வீட்டிலேயே கலப்படமில்லாமல் தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் அதிகப்படியான இலாபத்தை அடைய முடியும்.
* வெள்ளரி விதை
* கற்கண்டு
* கசகசா
* தேன்
* பின்பு, இந்த கலவை இருக்கும் அளவிற்கு மூன்றில் ஒரு பங்கு சுத்தமான தேன் விட்டு நன்றாக கிளறவும். இதனை ஒரு ஜாடியில் போட்டு இத்துடன் வெள்ளரி விதை மற்றும் கசகசா சேர்த்தால் ஆரோக்கியத்திற்கு ஏற்ற குல்கந்து தயார்.
தேவையான பொருட்கள்:
* ரோஜா இதழ்கள்* வெள்ளரி விதை
* கற்கண்டு
* கசகசா
* தேன்
செய்முறை :
* தரமான, சிவந்த நிறமுடைய பூக்களிலிருந்து இதழ்களை பறித்து கொள்ளவும். இந்த இதழ்களை நீரில் கழுவி சுத்தம் செய்து தனியாக வைக்கவும். ஈரம் வடிந்த பின் நிழலில் உலர்த்தவும். இப்போது இந்த இதழ்களின் எடையைப் போல, மூன்று மடங்கு கற்கண்டை இதனுடன் சிறிது சிறிதாக சேர்த்து இடிக்க வேண்டும். இந்த கலவை ஜாம் போல ஆகும் வரை இடிக்கவும்.* பின்பு, இந்த கலவை இருக்கும் அளவிற்கு மூன்றில் ஒரு பங்கு சுத்தமான தேன் விட்டு நன்றாக கிளறவும். இதனை ஒரு ஜாடியில் போட்டு இத்துடன் வெள்ளரி விதை மற்றும் கசகசா சேர்த்தால் ஆரோக்கியத்திற்கு ஏற்ற குல்கந்து தயார்.
கருத்துகள் இல்லை