பொதுவாக ஐஸ்கிரீம் என்றாலே சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகவே உள்ளது. இப்படிப்பட்ட ஐஸ்கிரீம்களை வீட்டில் தயார் செய்து விற்பனை செய்வதால் மக்களிடையே அதிக வரவேற்பு கிடைக்கும். ஆகவே, நாம் இந்த ஐஸ்கிரீமை தயார் செய்து விற்பனை செய்தால் அதிகபடியான இலாபம் பெற முடியும்.

தேவையான பொருட்கள் :

                  * கெட்டியானபால் - 1/4 கப்

                  * பால்பவுடர் - 1/2 கப்

                  * தண்ணீர் - 3/4 கப்

                  * வெண்ணிலா எஸன்ஸ் - சிறிதளவு

செய்முறை :

                    * கெட்டியான பாலினுள் 1/4 கப் தண்ணீர் விட்டு, வெண்ணிலா எஸன்ஸ் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும். பால்பவுடரை மீதம் உள்ள தண்ணீரில் கட்டி இல்லாமல் கரைக்கவும். தயார் செய்த இரண்டையும் தனித்தனியாக ஃபிரீஸரினுள் 1/2 மணி நேரம் வைத்து எடுக்கவும்.

                   * ஒரு பெரிய பாத்திரத்தில் ஐஸ் தண்ணீர் நிரப்பி அதனுள் பால்பவுடர் கரைசல் உள்ள பாத்திரத்தை வைத்து, பீட்டர் அல்லது கரண்டியால் நன்கு நுரை பொங்க அடிக்க வேண்டும். பின்னர் இதை கெட்டியான பால் கரைசலினுள் சேர்த்து மெதுவாக கலக்கவும். (குறிப்பு : இப்போது பீட்டர் அல்லது கரண்டியால் அடிக்க வேண்டாம்.)

                   * பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் கலவையை ஊற்றி ஃபிரீஸரில் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் வைத்து எடுக்கவும்.

                   * இப்போது மீண்டும் பீட்டரால் அல்லது கரண்டியால் நுரை பொங்க அடிக்க வேண்டும். அதனை மீண்டும் ஃபிரீஸரில் வைத்து இறுகவிடவும்.

                   * நன்கு இறுகி ஐஸ்கிரீம் கெட்டியானவுடன் வெளியில் எடுத்து அதில் பொடித்த முந்திரி, பாதாம் போன்றவற்றை தூவி டப்பாக்களில் அடைத்தால் விற்பனைக்கு தயாராகி விடும்.

விற்பனை முறை :

                    * நாம் தயார் செய்த ஐஸ்கிரீம்களை வீடுகளில் நடத்தப்படும் சிறிய விழாக்களுக்கு ஆர்டரின் பெயரில் செய்து கொடுத்து இலாபம் அடையலாம்.

ஐஸ்கிரீம் தயாரிக்கும் முறை

கருத்துகள் இல்லை