குறைந்த முதலீட்டிலும், குறைந்த பராமரிப்பிலும் அதிக பலன் தரும் தொழிலாக வான்கோழி வளர்ப்பு உள்ளது. எனவே இந்தத் தொழிலை மேற்கொண்டால் விவசாயிகளும், வீட்டில் உள்ள பெண்களும் பயன்பெற முடியும். தனியாக நிலம் இருந்தால் மட்டும் தான் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வணிக ரீதியாக வளர்க்க முடியும். அப்படியெல்லாம் நிலம் இல்லாதவர்களுக்கு கை கொடுப்பது வான்கோழி வளர்ப்பு முறைதான். இப்போது இதனை பற்றி விரிவாக காண்போம்.

தேவையானவை:

                            * வான்கோழி முட்டை

                            * இயந்திரம்

செயல் முறை :

                    * புதிதாக வான்கோழி வளர்க்க நினைப்பவர்கள், 200 முதல் 250 சதுர அடி இடத்தில் 100 குஞ்சுகளுடன் வளர்க்கத் தொடங்கலாம்.

                    * தோப்புகள் விவசாய நிலங்கள், தரிசு நிலங்கள், மலர்த்தோட்டம், பழத்தோட்டம், தென்னந் தோப்புகள் இவைகளில் வான்கோழி வளர்க்கலாம்.

                    * வான்கோழிகள் பெரும்பாலும் சுயமாக முட்டைகளை அடைகாப்பது இல்லை. அடைகாக்கும் இயந்திரத்தின் மூலம் அல்லது நாட்டுக் கோழிகளைக் கொண்டு அடைகாக்கப்படுகிறது.

                    * முட்டைகளை மழை, பனிக்காலத்தில் 7 நாள் வரையிலும், காற்று இளவேனிற் காலத்தில் 6 நாள் வரையிலும், வெயில் காலத்தில் 4 நாள் வரையிலும் சேமித்துவைத்துப் பின் அடை வைக்க பயன்படுத்த வேண்டும்.

                    * வான்கோழி வளர்ப்பில் மிக முக்கியமான காலகட்டம் ஒரு மாதம் வரை வளர்ப்பதாகும். பொரித்த குஞ்சுகளை முடி உலர்ந்த பின் செயற்கை வெப்பமாக புரூடர் அமைத்து புரதம் நிறைந்த தீவன உணவு கொடுக்க வேண்டும்.

                    * குளுக்கோஸ் கலந்த குடிநீரை வைக்க வேண்டும். வறுகடலை தூள் செய்து உணவாக கொடுக்கலாம். அவித்த முட்டையின் வெண்கரு மட்டும் எல்லாவகை தானியங்களுடன் கலந்து கொடுக்கலாம். இதற்கென்று பிரத்யேகமாக குஞ்சு தீவனங்கள் தயாரிப்பாளர்கள் உண்டு.

                    * 20 நாளைக்கு பின் பசுந்தீவனங்களைக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். வான்கோழி குஞ்சு வளரும் பருவத்தில் பசுமையான இலைகளை விரும்பி உண்ண ஆரம்பிக்கும்.

                    * மழைக்காலங்களில் தேங்கிய மழைநீர் மண் படிந்த இலைகளைக் கொடுக்கக்கூடாது.குடிநீரினை நிழலான இடங்களில் வைக்க வேண்டும். வெயில் பட்டு குடிநீர் சூடாவதை தவிர்க்க வேண்டும்.

                    * ஒரு வளர்ந்த வான்கோழிக்கு 5 சதுர அடி இடம் என்ற வகையில் கொட்டகை அமைத்து வளர்க்கலாம்.

முட்டையிடும் பருவம்:

                    * வான்கோழிகள் 7-8 மாதங்களில் முட்டை இட ஆரம்பிக்கும். 36 மணி நேரத்திற்கு ஒரு முறைதான் முட்டை வைக்கும். அதனை வைத்து தொழிலை வளர்ச்சி நிலைக்கு கொண்டு செல்லலாம்.

நோய்கள் :

                      * வான்கோழிகளை அம்மை மற்றும் சளி ஆகிய நோய்கள் அதிகமாகத் தாக்கும்.

                      * இதற்கு மருந்தாக சீரகம், மிளகு, வெந்தயம், மஞ்சள் தூள், கசகசா, கடுகு போன்றவற்றில் தலா 2 ஸ்பூன்கள், பூண்டு-5 , வெங்காயம்-4 ஆகியவற்றை லேசாகத் தண்ணீர் விட்டு அரைத்து, வாரம் ஒருமுறை தண்ணீரில் கலந்து கொடுத்து வந்தால், இந்த நோய்கள் தாக்காது.

                      * மாதம் ஒரு முறை 20 லிட்டர் தண்ணீரில் 200 கிராம் மஞ்சள் தூளைக் கலந்து, அதில் வான்கோழிகளின் தலை தவிர்த்து, மீதி உடலை முக்கி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வான்கோழிகளுக்கு, தோல் நோய்கள் வராது.

வான்கோழி வளர்ப்பு முறை

கருத்துகள் இல்லை