பெண்கள் தங்கள் வசம் உள்ள பேனா, நோட்புக், சாவிக்கொத்து, செல்போன், துப்பட்டா, கை வளையல் இவற்றை வைத்தே எதிரியை திணறடிக்க முடியும்.
இன்றைய பெற்றோர்கள் தங்களது பெண் பிள்ளைகளுக்குப் படிப்பைத் தருகிறார்கள், வசதி வாய்ப்பைத் தருகிறார்கள், எதிர்பாராத சூழ்நிலையில் யாராவது வந்தால், அதைச் சமாளிக்கும் மனோபக்குவத்தை தரவேண்டும்.
உங்களுக்கு தற்காப்பு கலை தெரிந்திருந்தால் எதிரிக்கும் பயம் ஏற்படும். உங்களைப் போன்ற பெண்கள் ஒரு நிமிடம் பயப்படுவதை எதிரி கண்டால், அவன் தாறுமாறாகத் தாக்க ஆரம்பிப்பான். அதுவே, நீங்கள் தற்காப்புப் பயிற்சி தெரிந்தவர்போல் காட்டினால், ஒரு அடி பின்வாங்குவான். அதைப் பயன்படுத்தி அந்த சூழலை விட்டு தப்பித்துக் கொள்ள வேண்டும்.
உங்களுடைய கைப்பையில் கருங்கல் ஒன்றை எப்போதும் வைத்திருங்கள். எப்படியும் நீங்கள் துப்பட்டா அணிந்திருப்பீர்கள். நீங்கள் பணிக்கு போகிற வழியில் யாராவது வழிமறித்தால், மின்னல் வேகத்தில் உங்கள் கைப்பையில் இருக்கும் கல்லை எடுத்து துப்பட்டாவில் சுற்றி எதிரியை நோக்கி வீசுங்கள்.
அதேபோல, அவசர சூழ்நிலையை சமாளிக்க சாவிக்கொத்தை எடுத்து ஒவ்வொரு விரலிலும் மாட்டிக்கொண்டு ஓங்கி குத்தினால் எதிரியின் முகத்தில் அடிபடும். எதுவுமே இல்லாவிட்டால்கூட, ஆள்காட்டி விரலையும், நடு விரலையும் மின்னல் வேகத்தில் எதிரியின் கண்களில் குத்தினால் போதும் எதிரி நிலை தடுமாறி விடுவான்.
தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எதிரியை எந்த விதத்தில் தாக்கினாலும் அது தவறாகாது. ஒருவேளை, எதிரி இறந்தே போய்விட்டால்கூட, உங்களுக்கு சட்டப் பாதுகாப்பு உண்டு. இதை முதலில் புரிந்துகொண்டு குறைந்தபட்ச பாதுகாப்பு அம்சங்களை கற்றுக்கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை