தொட்டில் குழந்தை திட்டம் என்பது தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மட்டும் நடைபெற்று வந்த பெண் குழந்தைக் கொலையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட திட்டமாகும்.
இத்திட்டத்தால் பயன் பெறுவோர்:
அனைத்து பெண் குழந்தைகள்
இத்திட்டத்தின் அம்சங்கள்:
பெண் குழந்தைகள் வளர்ப்பை சுமையாக நினைத்து, அதிக அளவில் பெண் சிசுக்கொலை நடைபெற்று வருவதை தடுக்கும் வகையில், 1992-ம் ஆண்டு ஜெயலலிதா கொண்டுவந்த சிறந்த திட்டம், தொட்டில் குழந்தை திட்டம்.
இத்திட்டத்தின் மூலம், பிறந்த பெண் குழந்தையை வளர்க்க முடியாத சூழலில் உள்ள பெற்றோர் அதை அரசின் பாதுகாப்பில் ஒப்படைக்க வழிசெய்யப்பட, அந்தக் குழந்தைகள் அரசு மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களால் வளர்க்கப்படுவார்கள்.
இத்திட்டத்தால், தமிழகத்தில் பெண் சிசுக்கொலையின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டப்படி, அரசு மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள் போன்ற இடங்களில் தொட்டில்கள் வைக்கப்படுகின்றன.
பெண் குழந்தைகளைக் கொலை செய்வதற்கு பதில், இத்தொட்டில்களில் பிறந்த பெண் குழந்தைகளை குடும்பத்தார் இட்டுச் செல்கின்றனர். இக்குழந்தைகள் தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள தொட்டில் குழந்தை மையங்களால் வளர்க்கப்படுவார்கள்.
இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட மாவட்டங்கள்:
* மதுரை
* திண்டுக்கல்
* தேனி
* தருமபுரி
* சேலம்
கருத்துகள் இல்லை