ஆதி தமிழன் படைத்த அற்புத கலைகளில் ஒன்று வர்மக்கலை ஆகும். இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இக்கலை தமிழ்நாடு, தமிழ் ஈழம், கேரளா, தற்கால ஆந்திராவின் கிழக்கு பகுதியில் பரவி இருந்தது.
இக்கலை சித்தமருத்துவத்தை துணையாகக் கொண்டு பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது.
இக்கலையை படைத்தவர் சித்தர்களில் சிறந்தவரான அகத்தியர் ஆவார். இது உருவான இடம் பொதிகை மலை (தற்போதைய குற்றால மலை).
'தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே' என்ற கி.மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலை சுவடியின் வரியே இதற்கு சாட்சி.
அகத்தியர் கற்பித்த வர்மக்கலைகளில்,
* 'அகஸ்தியர் வர்ம திறவுகோல்'
* 'அகஸ்தியர் வர்ம கண்டி'
* 'அகஸ்தியர் ஊசி முறை வர்மம்'
* 'அகஸ்தியர் வசி வர்மம்'
* 'அகஸ்தியர் வர்ம கண்ணாடி'
* 'அகஸ்தியர் வர்ம வரிசை'
* 'அகஸ்தியர் மெய் தீண்டா கலை' ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
'ஜடாவர்மன் பாண்டியன்' என்ற பாண்டிய மன்னன் இக்கலையில் சிறந்து விளங்கினார். பின்னர் பாண்டிய இனம் அழியத் தொடங்கியதும் இக்கலையும் அழியத் தொடங்கியது.
பாண்டியர்களுக்கு பிறகு வந்த சோழர்கள் இதனைக் கற்றனர். பின்னர் இந்தக் கலை இலங்கை, சீனா போன்ற நாடுகளில் பரவத் தொடங்கியது. காஞ்சியில் வாழ்ந்த போதிதர்மர் என்ற துறவி சீனாவில் இக்கலையை பரப்பினார்.
Tenjiku Naranokaku என்ற சீன வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் 'The fighting techniques to train the body from India' என்ற பொருளை தருகின்றது. இக்கலையானது அனைவருக்கும் கற்றுத்தரப்படமாட்டாது.
இதன் ஆசிரியர், தன் மாணவனுடைய 12 வருட பழக்கவழக்கங்களை அறிந்த பின்னரே இக்கலையைக் கற்று தருவார். இக்கலை மூலம் ஒருவர் தாக்கப்பட்டால் அதற்கென்று தனியாக உள்ள சிகிச்சை முறையை பயன்படுத்தியே சரிசெய்யமுடியும்.
கருத்துகள் இல்லை