பெண்கள் ஆணுக்கு நிகரானவர்கள் என்று சொல்வார்கள். உண்மையில் ஆண்களைவிட திறன் வாய்ந்தவர்கள் பெண்கள்.
எல்லாவற்றிலும் ஆண்களைக் காட்டிலும் சிறந்து விளங்கக்கூடிய ஆற்றல் பெண்களுக்கு இருக்கிறது. சரியான பயிற்சிகளை மேற்கொள்ளும் போது அப்படியொரு பலத்தைப் பெண்களாலும் பெற முடியும்.
பலம் குறைந்தவர்கள் மீதுதான் வன்முறைக் கையாளப்படுகிறது. பெண்களும் பலமடைந்து விட்டார்கள் என்றால் வன்முறைகளை எதிர்த்து நிற்கலாம். களரி போன்ற நமது வாழ்வியல் சார்ந்த கலையை கற்றுக்கொள்வதன் மூலம் உடல்நலம், தற்காப்பு இரண்டையும் வலுப்படுத்த முடியும்.
இந்தக் கலையின் சக்தியினால் பாரதத்தின் தென்பகுதி பெருமளவில் அந்நிய படையெடுப்பால் அழியவில்லை, பெரும் கோயில்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
இக்கலை வெறும் தற்காப்பு கலையாக மட்டும் அல்லாமல், மனிதனின் வளர்ச்சிக்கும் பெருமளவில் உதவுகிறது. உடல் மற்றும் மனம் பலம் பெற உதவுகிறது. நம் நாட்டின் கலாச்சாரத்தை உறுதிப்படுத்த களரி ஒரு கருவியாக திகழ்கிறது.
கருத்துகள் இல்லை