சிலம்பாட்டத்திற்கான கம்பு அல்லது தடி, மூங்கில் இனத்தைச் சேர்ந்த சிறுவாரைக் கம்பு, பிரம்பு போன்ற மரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் சிறுவாரைக் கம்பு என்பது நன்கு வளைந்து கொடுக்கக்கூடியது. சிலம்பத்திற்கான தடி நிலத்தில் இருந்து ஓர் ஆளின் நெற்றிப் புருவம் வரையிலான உயரமுடையதாக இருக்க வேண்டும்.
சிலம்பாட்ட வகைகள் :
சிலம்பத்தில் பல வகைகள் உண்டு. அவையாவன துடிக்காண்டம், குறவஞ்சி, மறக்காணம், அலங்காரச் சிலம்பம், போர்ச் சிலம்பம், பனையேறி மல்லு, நாகதாளி, நாகசீறல், கள்ளன்கம்பு ஆகியனவாகும்.
கருத்துகள் இல்லை