ஒவ்வொரு வீட்டிலும், மூன்று சின்ன குப்பை தொட்டிகள் வைக்கவேண்டும். ஒன்றில், காய்கறி மற்றும் உணவு கழிவு. இரண்டாவதில், பால் கவர், சாக்லெட் கவர் மற்றும் இதர பிளாஸ்டிக் பொருட்கள். மூன்றாவது தொட்டியில், பொட்டல காகிதம், பேக்கரி அட்டை போன்ற காகித கழிவுகளை சேகரித்து வைக்க வேண்டும்.
மக்கும் குப்பையை, தினமும் மாலையில் டிரம்மில் போட்டு, மேலே ஒரு கைபிடி மண் தூவினால், சில நாட்களில் அது உரமாக மாறிவிடும்.
மூன்று மாதத்திற்கு ஒரு முறை, அந்த உரத்தை எடுத்து, செடிகள், தென்னை மரத்திற்கு உரமாக பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த மறு சுழற்சியில், டிரம்மில் பாதிக்கு மேல் குப்பை தேங்காது என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள இரண்டு தொட்டியில், சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் மற்றும் பழைய தாள்களை மாதம் ஒரு முறை, பழைய பேப்பர் கடையில் இலவசமாக கொடுத்துவிடலாம்.
கருத்துகள் இல்லை