தற்காப்பு கலைகள் அல்லது சண்டைக் கலைகள் என்பது சண்டைப் பயிற்சி பெறுவதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட மரபுகளையும், செயல்முறைகளையும் குறிக்கும். பல காரணங்களுக்காக இவற்றை கற்றுக்கொள்ளலாம்.
இருப்பினும், இவை அனைத்திற்கும் இலக்கு ஒன்றுதான். இந்த இலக்கு, ஒருவர் அல்லது பலரை உடல்ரீதியாகத் தோற்கடிப்பது அல்லது தனக்கோ பிறருக்கோ ஏற்பட்டுள்ள உடல் ரீதியான பயமுறுத்தல்களுக்கு எதிராக அவர்களைக் காத்துக்கொள்வது ஆகும்.
சில தற்காப்பு கலைகள், ஆன்மீகம் மற்றும் மதம் ஆகிய நம்பிக்கைகளுடனும் தொடர்பு கொண்டுள்ளது.
சில தற்காப்பு கலைகளின் வடிவங்கள் அவற்றுக்காகவே உள்ள ஆன்மீகம் சார்ந்த அல்லது ஆன்மீகம் சாராத நெறிமுறைகளைக் கொண்டவையாக இருக்கின்றன. பல தற்காப்பு கலைகள், தற்காப்பு விளையாட்டாகவும் கற்றுக்கொள்ளப்படுவதுண்டு.
மேலும் சில தற்காப்பு கலைகள் ஒரு நடன வடிவம் போன்றும் நிகழ்த்திக் காட்டப்படுகின்றன.
நடனம், இசை, மொழி போன்றே ஒவ்வொரு இன அல்லது மக்கள் குழுவும் தனித்துவமான தற்காப்பு கலை மரபை கொண்டிருக்கின்றது.
தென்னிந்திய நாடுகள் பிற நாடுகளோடு தொடர்ந்து போர்களில் ஈடுபட்டதால் போரியலின் ஒரு அம்சமாக தற்காப்பு கலைகள் பயன்படுத்தப்பட்டது.
தமிழர்களின் தற்காப்பு கலைகள் பல்லவ, சேர, சோழ மற்றும் பாண்டிய நாடுகளின் போர் மரபில் தோன்றிய சண்டை அல்லது தற்காப்பு வழிமுறைகள், மரபுகள், நுட்பங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை குறிக்கின்றன எனலாம்.
தமிழகத்தின் பாரம்பரிய தற்காப்பு கலைகள் :
தற்காப்பு என்பது ஒரு ஆபத்தான அல்லது அழிவுகளை தரக்கூடிய சூழ்நிலைகளில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வது ஆகும். இதுப்போன்ற ஆபத்துகளை தடுப்பதற்கு தன் சுய எச்சரிக்கை மூலமாகவும், பிற தானியங்கி செயல்பாட்டின் மூலமாகவும் பாதுகாக்கும் நெறிமுறைகள் உள்ளன.
பாரம்பரிய கலைகள் :
தற்காலத்திய பாணியிலான நாட்டுப்புற மல்யுத்தம் மற்றும் நவீன கலப்பின தற்காப்பு கலைகள்.
கருத்துகள் இல்லை