உடற்பயிற்சி நன்மைகள் :
தற்காப்பு கலை பயிற்சி பெறுபவருக்கு உடல், மனவெழுச்சிகள் மற்றும் ஆன்மீக ஆரோக்கியம் போன்ற பல நன்மைகளை விளைவிக்கும்.
தற்காப்பு கலைகளில் முறையான பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் ஒரு நபரின் உடல் நலன், உடற்கட்டு போன்றவற்றை மேம்படுத்தப்படலாம்.
வலிமை, சகிப்பு தன்மை, நெகிழ்வு, இயக்கம் ஒருங்கிணைப்பு முதலியவற்றை மேற்கொள்வதன் மூலம் முழு உடலையும் செயல்பாட்டில் வைத்திருப்பதோடு, முழு தசை மண்டலமும் ஒருங்கிணைந்து செயல்பட தூண்டப்படுகிறது.
மனநலத்திற்கான நன்மைகள், சுய மரியாதை, தன்னிறைவு, உணர்ச்சி மற்றும் ஆன்மீக நல்வாழ்வு ஆகியவற்றுக்காக தற்காப்பு கலை பயிற்சி உதவுகிறது. பல தற்காப்பு கலைப் பள்ளிகள் முழுமையாக சிகிச்சை முறைகளில் கவனம் செலுத்துகின்றன.
தற்காப்பு கலையின் பயன்கள் :
* நம் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.
* நம் உடலில் ஓடும் இரத்தத்தின் அளவை சீராக்குகிறது.
* நம் மூளையின் செல்களை வலுப்படுத்தி சுறுசுறுப்பான ஆற்றலையும், ஞாபக சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.
* உறுதியான உடல் அமைப்பைக் கொடுக்கிறது.
* உடலும், மனதும் கட்டுப்பாடுடன் செயல்பட வைக்கிறது.
* இறுதியாக எதிரிகளிடம் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள பயனுள்ளதாக இருக்கிறது.
* இது ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் நல்ல உடற்பயிற்சியாக இருக்கும்.
Yentjyjgegrg
பதிலளிநீக்குHf
பதிலளிநீக்கு