தென்னிந்தியாவில் தோன்றிய பல தற்காப்பு கலைகளை பிரித்தானிய பேரரசு தடை செய்தது. அவற்றிலிருந்து களரி மற்றும் சிலம்பம் தப்பிப் பிழைத்தன. முக்கிய தற்காப்பு கலைகளுள் ஒன்றான வர்மக்கலை கிட்டத்தட்ட அழிந்த நிலைக்குச் சென்று பின்னர் படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டு வருகிறது.
பெண்களுக்கான தற்காப்பு கலைகள் :
பெண்கள் கண்டிப்பாக தற்காப்பு கலையை பயில்வது மிகவும் நல்லது. ஏனெனில் பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதே அதற்கான முக்கிய காரணம் ஆகும்.
பெண்கள் வெளியில் செல்லும் போது தங்களை காத்து கொள்ள தற்காப்பு கலை மிகவும் அவசியம். தனியாக வெளியில் செல்லும் போதும், வீட்டில் தனியாக இருக்கும் போதும் இந்தக் கலை உதவுகிறது. அனைத்து வயதினரும் இக்கலையை பயிலலாம்.
மனரீதியான பயிற்சிகளை கற்றுக்கொள்ள வேண்டும். தற்காப்பு கலைகளை பயின்றால் ஆண்கள் போன்று உடல் தோற்றமாகலாம் என பலர் கருதுகின்றனர். ஆனால், இது தவறான எண்ணமாகும். தற்காப்பு கலை பயிற்சியை செய்வதன் மூலம் பெண்களின் உடலில் எந்த மாற்றமும் நிகழாது.
உடல் பருமனானவர்கள் அதிகாலையில் இப்பயிற்சிகளை செய்ய வேண்டும். வேலை செய்யும் இடங்களிலும், கல்வி பயிலும் இடங்களிலும் பெண்களுக்கு ஏற்படும் வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனில் பெண்களுக்கு தற்காப்பு கலை மிகவும் அவசியமான ஒன்றாகும்.
கருத்துகள் இல்லை