களரி தற்காப்பு கலைகளிலேயே நமது மண் சார்ந்த கலை களரி. இது தற்காப்பு கலை மட்டுமல்ல. நமது உடலியல், உளவியல் நலத்தையும் ஏற்படுத்துகிறது.
களரிப்பயட்டு என்பது தெக்கன்களரி, வடக்கன்களரி என்று இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
வெவ்வேறு இடங்களில் பயிற்றுவிக்கப்பட்டு வந்ததால் இந்த பெயர்கள் ஏற்பட்டுள்ளது. தங்களை தற்காத்துக் கொள்வதற்கு இதுப்போன்ற பயிற்சிகள் அவசியம். இந்த பயிற்சியைப் பெற்றவர்கள் எந்த ஆயுதங்களும் இல்லாமல் தங்களை தாக்க வருபவர்களை எதிர்த்து தாக்க முடியும்.
இன்றைக்கு நமது வாழ்வியலே மாறிவிட்ட காரணத்தால்தான் நாம் பல நோய்களை சந்திக்கிறோம். நமது வாழ்வியலிலேயே கலந்திருந்த உடற்பயிற்சி, இன்றைய காலக்கட்டத்தில் இல்லாமல் போய்விட்டது. இதனால் தான் நாம் அவசியம் உடற்பயிற்சிகள் மூலம் உடலை தயார்படுத்த வேண்டியிருக்கிறது.
களரிப்பயட்டு, தென்னிந்தியப் போர்கலை, தற்காப்பு கலை மற்றும் இன்றுள்ள தற்காப்பு கலைகளுக்கெல்லாம் தாய்க்கலை ஆகும்.
ஆசான் அகஸ்திய முனிவர், தான் கற்ற யோகக்கலைகளை மக்களுக்கு கற்றுக்கொடுப்பதற்காக தன் குருவின் ஆணைக்கு இணங்க தென்பகுதி நோக்கி வந்தார். வரும்வழியில் காட்டு மிருகங்கள், வழிப்பறித் திருடர்கள் தொல்லை இருப்பதைக் கண்டார். இதிலிருந்து மக்கள் தங்களைக் காத்துக்கொள்வதற்காக களரிப்பயட்டு உருவாக்கினார்.
கருத்துகள் இல்லை