நம்முடைய பொருட்கள், உடமை, வீடு அனைத்தும் இறைவன் நமக்குகொடுத்த அருட்கொடைகள், பாக்கியங்கள். அதனை முறைப்படி பராமரித்து சுத்தப்படுத்தி, மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்தால் இல்லம் இனிய இல்லமாகிவிடும்.

              மனமும் நிறைந்ததாகிவிடும். மற்றவர்கள் அதனைக்காணும் பொழுது நம்மேல் உள்ள மரியாதையும் அதிகரிக்கும். சிறிய வீடோ, பெரிய வீடோ, பழைய வீடோ, புது வீடோ, சொந்த வீடோ, வாடகை வீடோ எதுவாக இருந்தாலும், அதனை சுத்தமாகவும் சுகாதாரமாகும் வைத்திருப்பது நமது கடமை.

             ஆணும் சரி, பெண்ணும் சரி இருவரும் சேர்ந்தே இதில் ஈடுபாடு காட்டினால் பிற்காலத்தில் குழந்தைகளும் அதனைப் பின்பற்றுவார்கள்.

குடும்பத்தின் ஒத்துழைப்பு

              பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு சில நியதிகளை வகுத்து, வேலை செய்யும் பழக்கம் இயல்பாகவே அவர்களுக்கு வரும் படி மாற்ற வேண்டும். எனவே பிள்ளைகள் காலையில் பள்ளிக்குப் போகும் முன் படுக்கையைச் சரிசெய்துவிட்டு, அழுக்குத் துணிகளை அதற்குரிய இடத்தில் போட்டுவிட்டு, தங்கள் பொருட்களையெல்லாம் சரியான இடத்தில் வைத்துவிட்டுச் செல்லவேண்டும்.

              எல்லோருக்கும் பயனளிக்கும் ஒரு நியதி இதோ: "பொருட்களை அதனதன் இடத்தில் வைக்க வேண்டும்" என்பதுதான்.

              வீட்டில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலையைப் பிரித்துத் தரலாம், அல்லது சுத்தம் செய்வதற்கு ஒவ்வொரு இடத்தைத் தரலாம்.

              உதாரணத்திற்கு, அப்பா, கார் ஷெட்டை வருடத்திற்கு ஒரு முறையாவது முழுமையாகச் சுத்தம் செய்து பொருட்களை ஒழுங்காக அடுக்கி வைக்கிறாரா? இந்த வேலையைச் செய்வதற்கு ஒரு பிள்ளையாவது அவருக்கு உதவ முடியுமா? வீட்டிற்கு முன் வளர்ந்து கிடக்கிற களைகளைப் பிடுங்கிப்போடுவதும் புற்களை வெட்டுவதும் யார்? மொட்டை மாடியில் அல்லது வீட்டிற்குள் ஸ்டோர் ரூம் ஏதாவது இருக்கிறதா? அப்படியிருந்தால் வேண்டாத பொருட்களெல்லாம் கழிக்கப்பட்டு அது சுத்தமாக இருக்கிறதா? இல்லையென்றால் யார் அதைச் சுத்தம் செய்வது? இப்படிப்பட்ட வேலைகளைச் சில பெற்றோர் பிள்ளைகளுக்கு சுழற்சி முறையில் தரவேண்டும்.

             ஆகவே, உங்கள் வீட்டைப் பராமரிப்பதற்கு நன்கு திட்டமிடுங்கள். நீங்களாகவே சுத்தம் செய்தாலும் சரி, உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து சுத்தம் செய்தாலும் சரி, அல்லது ஒரு ஆளை வேலைக்கு வைத்து சுத்தம் செய்தாலும் சரி, ஒழுங்காகத் திட்டமிடுவது ரொம்ப அவசியம்.

வீட்டு பராமரிப்பின் முக்கியத்துவம்

கருத்துகள் இல்லை