சிலம்பாட்டத்தின் முக்கிய உட்கூறாக குத்து வரிசை அமைகிறது. பெயருக்குத் தகுந்தாற்போல் எதிரியைக் கைகளால் வரிசையாகக் குத்துவதே குத்துவரிசையாகும்.
குத்துவரிசையில் நுணுக்கமாக நிற்கும் நிலைகளை எப்படி இலாகவமாக மாற்றிக் கொள்வது என்பதைக் கற்றுக்கொள்வது இன்றியமையாததாகும். கிட்டத்தட்ட அறுபத்து நான்கு விதமான நிலைகள், புலி, யானை, பாம்பு, கழுகு மற்றும் குரங்கு ஆகிய உயிரினங்களிடமிருந்து கற்றுக் கொள்ளப்படுகின்றன.
எதிரியின் நிலை மற்றும் இடப்பெயர்ச்சிக்கேற்ப தன் நிலைகளை விரைவாக மாற்றிக் கொண்டே எதிரியின் மீது குத்துவிடுதல் என்பதே குத்துவரிசையாகும்.
குத்து வரிசையின் பயன்கள் :
வரிசையான முறையில் குத்துவது. இந்த வகை கலையில் எவ்வாறு கைகளையும் கால்களையும் தகுந்த முறையில் பாதுகாப்புக்காக பயன்படுத்துவது என்பது சொல்லப்படுகிறது.
குத்து வரிசை பயிற்சி ஆரம்பிப்பதற்கு முன்னால் யோகா, மூச்சு பயிற்சி மற்றும் சில உடற்பயிற்சிகள் கொடுக்கப்படும். இப்பயிற்சியில் ஏறக்குறைய கைமுட்டி, முழங்கை, முழங்கால், பாதம் போன்ற உடலின் எல்லா பாகங்களும் ஈடுபடுத்தப்படுகிறது.
கருத்துகள் இல்லை