இந்து திருமணச் சட்டம் (1964 இல் தமிழக அரசின் திருத்தச்சட்டப்படி) சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டரீதியான அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
மதச்சடங்குகள் இல்லாமல் செய்து கொள்ளும் திருமணமே சுயமரியாதை திருமணம் அல்லது சீர்திருத்த திருமணமாகும்.
சுயமரியாதை திருமணத்தை செல்லுபடி ஆக்குவதற்காக இந்து திருமணசட்டம் 7ஏல் திருத்தம், 1967ல் கொண்டுவரப்பட்டது. நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் சுயமரியாதை திருமணம் செய்து கொள்ளலாம்.
மணமக்கள் தாம் ஒருவரை கணவன் அல்லது மனைவியாக ஏற்றுக்கொள்கிறோம் என்று தனக்கு தெரிந்த மொழியில் உறுதிமொழி ஏற்க வேண்டும். வேறு சடங்குகள் அவசியமில்லை.
தமிழ்நாட்டில் உள்ள இந்துக்களுக்கு மட்டுமே இது பொருந்தும். பெரியவர்கள், உற்றார் உறவினர்கள் முன்னிலையில் உறுதிமொழி எடுத்தும் சுயமரியாதை திருமணம் செய்து கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை