தேவையான பொருட்கள்:
* மக்காச்சோள மாவு 1 கப்
* மைதா மாவுகால் கப்
* உப்புதேவைக்கேற்ப
* எண்ணெய் தேவைக்கேற்ப
செய்முறை :
மக்காச்சோள மாவு, மைதா மாவை ஒன்றாகக் கலக்க வேண்டும். உப்பு, தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும். அதிக நேரம் ஊற வைக்கத் தேவையில்லை.
பிசைந்த மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திக் கல்லில் போட்டு ரொட்டிகளாகத் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
சூடான தோசைக் கல்லில் போட்டு, இருபுறமும் கொஞ்சமாக எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : குருமா, சட்னியில் தொட்டு சாப்பிடலாம்.
கருத்துகள் இல்லை