தேவையான பொருட்கள் :
* கடலை மாவு ஒன்றரை கப்
* உருளைக்கிழங்கு 3
* பச்சை மிளகாய் 5
* வெங்காயம்3
* மிளகாய்த்தூள்கால் டேபிள் ஸ்பூன்
* கடுகு அரை டீஸ்பூன்
* சீரகம் அரை டீஸ்பூன்
* சோம்பு அரை டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு அரை டீஸ்பூன்
* நெய்ஒரு டீஸ்பூன்
* கறிவேப்பிலை 1 கொத்து
* கொத்தமல்லித் தழைஒரு கைப்பிடி
* உப்பு தேவைக்கேற்ப
* எண்ணெய் தேவைக்கேற்ப
செய்முறை :
பச்சைமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்து தோல் உரித்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், சோம்பு ஆகியவற்றைப் போட்டுத் தாளித்துக்கொள்ளவும்.
பிறகு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுச் சிவக்க வதக்கிக்கொண்டு வேகவைத்த உருளைக்கிழங்கையும் போட்டு வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின் மிளகாய்த்தூளையும் உப்பையும் போட்டு நன்கு மசித்துக் கொள்ளவும். கடைசியாக கொத்துமல்லித்தழையையும் போட்டு நன்றாக கிளறி விடவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவைக் கொட்டிச் சிறிது தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசைந்து அதைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
அந்த மாவு உருண்டைகளை வட்ட வடிவில் தேய்த்துக்கொண்டு அவற்றின் நடுவே மசாலாவை வைத்து முக்கோண வடிவில் மடித்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணைவிட்டு காய்ந்ததும் கட்லெட்டுகளை ஒவ்வொன்றாக போட்டு எடுக்கவும்.
கருத்துகள் இல்லை