* புதிதாய் நிலம் வாங்கி வீடு கட்டுபவர்கள் அனைவருக்கும் வீட்டைச் சுற்றி மரம் வளர்க்க ஆசைதான். ஆனால் சிறிய மரக் கன்றுகளை நட்டு அதனைப் பராமரித்து வளர்க்கும்போது உள்ள சிரமங்கள் தான் மரம் வளர்க்கும் ஆசையையே போக்கிவிடுகிறது. ஆடு மாடுகள் மரக்கன்றுகளை கடிக்காமல் வேலி அமைத்துப் பாதுகாக்க வேண்டும்.
* ஆடு மாடு வராத இடமாயிருந்தால் காற்றில் வளைந்து ஒடிந்துவிடாமல் கம்புகளை நட்டு மரக்கன்றுகளைப் பாதுகாக்க வேண்டும். இப்படி பல வேலைகள் உள்ளதாலேயே பலருக்கும் மரம் வளர்ப்பு மீது இனம் புரியாத வெறுப்பு ஏற்படுகிறது.
* இந்தக் கஷ்டம் எதுவும் இல்லாமல் விரைவில் மரம் வளர்க்கக் கூடிய எளிதான முறை மரத்தை வெட்டி நடுதல் ஆகும். வீட்டின் முன்பும் வீட்டைச் சுற்றியும் பெரும்பாலும் வேப்பமரம் வளர்ப்பதையே அதிகம் விரும்புவார்கள்.
* வேப்பமரம் குளுமையான காற்றைத் தருவதோடு மருத்துவ குணமும் உள்ளதால் எல்லோராலும் பெரிதும் விரும்பப் படுகிறது. வெட்டி வைத்தால் நன்கு வளரக்கூடிய மரங்களுள் வேப்பமரம் முதன்மையானது.
கருத்துகள் இல்லை