* விதைப்பந்து (Seeds Ball) என்பது களிமண் மற்றும் உரம் (compost) அல்லது பசுஞ்சாணத்தாலான உருண்டை ஆகும். இவற்றின் நடுவே மூலிகைகள் (அ) வண்ண மலர் (அ) மரம் விதைகள் இருக்கும்.

            * பொதுவாக வெறும் விதைகளை விதைத்தால் அவை மற்ற உயிரினங்களால் உணவாக்கப்படலாம் (அ) வெப்பத்தால் தன் முளைக்கும் தன்மையை இழந்து விடலாம். நிலமானது செடி வளர்வதற்கான தன்மை இல்லாமல் கடினமானதாக இருக்கலாம். அதனால் விதைகள் முளைக்காது.

            * எனினும் விதைப்பந்தானது அவ்வாறில்லை. நீங்கள் வெளியே செல்லும் போது தரிசு நிலங்கள் (அ) காடுகள் (அ) மலைகள் இருந்தால் இதனை வீசி செல்லலாம். அவ்விதைகள் மழை வரும் வரை எலி, எறும்பு, குருவிகளிடமிருந்து பாதுகாப்பாய் இருக்கும். ஒரு வருடம் வரை விதை பத்திரமாக முளைக்க ஏற்றதாக இருக்கும்.

            * விதைகளை பொறுத்தவரை சில நாட்களுக்கு தேவையான சத்துக்கள் விதையிலேயே வைக்கப்பட்டிருக்கும். எனவே சில நாட்களுக்குப்பின் உரம் தேவைப்படும். இதன்போது விதைப்பந்தில் கலந்துள்ள உரம் (அ) சாணமானது மண்ணில் நுண்ணுயிர்களை உருவாக்கி செடியின் வேர் மண்ணில் எளிதில் செல்ல ஏற்ற வகையில் பக்குவப்படுத்தி விடும். மண்ணின் கடினத்தன்மையை அகற்றி மிருதுவாக்கி விடும். உரம் (அ) சாணத்தை உண்ணும் நுண்ணுயிர்களின் கழிவை செடியின் வேர் உண்டு தன்னை அம்மண்ணில் நிலைப்படுத்திக் கொள்ளும். மேலும் விதைப்பந்தில் தண்ணீர் பட்டவுடன் இளகுவதுடன் நுண்ணுயிர்களை உண்டாக்கி நிலத்தை உழுது இளகுவாக்கியும் விடும்.

            * நிலத்தில் விழுந்த இந்த உருண்டைகலிலுள்ள களிமண் உருகி நிலத்தோடு ஒட்டும் மற்றும் அதிலுள்ள கலப்பு கூட்டு உரம் விதை வளர துணை புரியும்.

            * அவ்வாறு எறியப்பட்ட பந்துகளில் உள்ள விதைகள் முளைத்து அந்த இடமே பச்சை பசேலென்று காட்சியளிக்கும், எங்கெல்லாம் வறண்ட தரிசு நிலம் காணப்பட்டதோ அங்கு அழகிய வண்ண மலர் செடிகளின் விதைகளை தூவ நந்தவனாமகும். இந்த முறையால் சிறு பறவைகள் , பட்டாம்பூச்சிகள் மற்றும் தேனீக்கள் ஆகியன பயன்பெறும்.

            * எனவே ஓய்வு நேரத்தில் விதைப்பந்தை உருவாக்கி வைத்து வெளியே செல்லும் போது நல்ல இடம் பார்த்து வீசி விடுங்கள். கோடை காலமானாலும் வீசி விடுங்கள். பறவைகள் கூட தனக்கு உணவளித்த மரத்திற்கு நன்றிக்கடனாக விதைகளை நிலத்தில் எச்சமாக விதைத்துச் செல்கிறது. அதைப்போல் நாமும் விதைப்பந்தை விதைப்போம்.

விதைப்பந்து

கருத்துகள் இல்லை