* வேப்பமரம் எல்லா காலங்களிலும் நன்கு வளரும் மரம் என்றாலும் மரத்தை வெட்டி நடுவதற்கு மிகவும் ஏற்ற காலம் மழைக் காலத்திற்கு முந்தைய மாதமாகும். அதாவது ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் வெட்டி நடுவது சிறந்ததாகும்.

           * ஏனெனில் வெட்டி நட்ட மரம் வேர் விட ஆரம்பிக்கும் போது செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் மழைக் காலம் தொடங்குவதால் இதமான சூழ்நிலை நிலவும். இந்தச் சூழல் மரம் நன்கு வளர உதவும்.

           * விவசாயப் பகுதிகளிலும் தோட்டங்களிலும் வேப்பமரங்கள் தானாய் அதிகம் வளரும் மரமாகும். இம்மரங்களில் இரண்டு ஆண்டு முதல் ஐந்து ஆண்டு வரையுள்ள மரங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். நேராக ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் வளர்ந்துள்ள மரங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

            * மரங்களை உடனடியாக வெட்டி எடுக்காமல் முதலில் கிளைகளை வெட்டிவிட வேண்டும். பின்னர் மரத்தைச் சுற்றி குழியைத் தோண்டி ஆணி வேர் தவிர மற்ற வேர்களை அரிவாளால் வெட்டி விட்ட பின் மண்ணைத் தள்ளி மூடி விட வேண்டும்.

            * ஒரு வாரமோ அல்லது இரண்டு வாரமோ கழித்து மீண்டும் மண்ணைத் தோண்டி ஆணி வேரை வெட்டி எடுத்து மரத்தை உடனடியாக நட வேண்டும். ஏற்கெனவே வெட்டிவிட்ட இடங்களில் புதிய வேர்கள் வளர ஆரம்பித்திருக்கும். கிளைகளும் துளிர் விட்டிருக்கும். இதனால் மரங்கள் வைத்த உடனேயே முளைக்க ஆரம்பித்துவிடும்.

மரம் நடும் காலம்

கருத்துகள் இல்லை