* மாவட்டம் : கோயம்புத்தூர்
* இடம் : கள்ளிமடை
முகவரி :
சிங்காநல்லூர்,கோயம்புத்தூரிலிருந்து 13 கி.மீ. தொலைவில் சிங்காநல்லூர் ஏரி அமைந்துள்ளது.
தாலுகா: கள்ளிமடை
வரலாறு :
சிங்காநல்லூர் குளம் என்றழைக்கப்படும் சிங்காநல்லூர் ஏரி, தமிழ்நாட்டில் கோயம்புத்தூரின் சிங்காநல்லூர் பகுதியில் அமைந்துள்ள பெரிய ஏரிகளுள் ஒன்று. சுமார் 288 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, சோழர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டது. இந்த ஏரியைச் சுற்றி உள்ள பல வகையான பூக்கள் மற்றும் தாவரங்களால், இங்கு வசிக்கும் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் புகழ்பெற்ற இடமாக விளங்குகிறது.
இதைச் சுற்றிலும் உள்ள புல்வெளிகளை இருப்பிடமாகக் கொண்டு வாழும் பறவைகளைப் பார்க்க வருபவர்களுக்கு இந்த ஏரி சொர்க்கமாக தெரிகிறது. இந்த இடத்திற்கு கிட்டத்தட்ட நூறு வகையான பறவைகள் வழக்கமாக வருகின்றது. வசந்த காலத்தில் இங்கு பறவைகளைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளால் இந்த இடம் பரபரப்பாக காணப்படும்.
பறவை இனங்கள் :
கோவையின் இந்த நீர்நிலையில் 120 வகையான பறவைகளின் இருப்பிடமாக உள்ளன. நாடோடிப் பறவைகள் மிகவும் கூடுதலாக ஆகஸ்ட் - அக்டோபர் மாதங்களில் வருகின்றன. கூழைக்கடா, நீர்க்காகம், பாம்புத்தாரா, நீலவண்ண தாழைக்கோழி, நாமக்கோழி முதலிய பறவைகளை இந்த ஏரிகளில் காணலாம்.
உலகெங்கிலும் இருந்து பறவைகளை ஆராய்ச்சி செய்யும் வல்லுனர்கள், இங்கு மட்டுமே காணக் கிடைக்கும் அரிய, அபூர்வ பறவைகளை காண வருகிறார்கள். எக்ரெட், ஹெரான், ஸ்டார்க், இபிஸ், ஸ்பூன் பில், கைட், ஹாரியர், டீல் முதலியன இங்கு வரும் பறவைகளுள் சிலவற்றின் வகையாகும்.
இங்கு குறிப்பாக 396 வகை தாவரங்கள், 120 வகையான பறவைகள், 62 வகையான பட்டாம்பூச்சிகள், 22 வகையான பாலூட்டிகள் என பல்வேறு உயிரினங்கள் இந்த குளத்தை நம்பி உயிர் வாழ்வதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
மிக முக்கியமாக 200 வகையான மூலிகைச் செடிகள், வெளிநாட்டுப் பறவையினங்கள் ஆகியவற்றுக்கு சிங்காநல்லூர் குளம் அடைக்கலம் கொடுக்கும் இடமாக உள்ளது. பல்லுயிர் பெருக்கத்தின் முன்மாதிரியாக திகழும் சிங்காநல்லூர் குளம் தமிழகத்தின் முதல் நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏரியின் சிறப்புகள் :
* நொய்யல் ஆறு இதன் நீராதாரமாக விளங்குகிறது.
* கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை குளத்தை ஒட்டிச் செல்கிறது. மேலும் போத்தனூர் - இருகூர் இருப்புப் பாதை குளத்தின் நடுவில் செல்கிறது.
* ஆகாயத்தாமரைகள் அதிகம் காணப்படுகின்றன. மழைநீர் நிறைந்திருக்கும் நாட்களில் மீன் பிடித்தலும் நடைபெறுகிறது.
* பறவைகள், விலங்குகள், ஊர்வன, நிலநீர் வாழிகள், மீன்கள் எனப் பல உயிர்களின் ஆதாரமாக இந்த ஏரி அமைகின்றது.
கருத்துகள் இல்லை