* மாவட்டம் : கோயம்புத்தூர்

            * இடம்    : அன்னூர்

முகவரி  : 

              அன்னூர் - தென்னம்பாளையம் சாலையில் 2 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

தாலுகா: அன்னூர்

வரலாறு  : 

              பழனி முருகனை ஒத்த உருவத்தைக் கொண்ட சிறிய அளவிலான திருமேனி உடைய அருள்மிகு வட்டமலை ஆண்டவர் திருக்கோவில், கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூரில் உள்ளது. இந்த கிராமத்து கோவில் அழகிய இயற்கை எழிலில் அமைந்துள்ளது.

             முருகப்பெருமான் எப்போதும் ஓர் உயர்ந்த இடத்தில் வீற்றிருந்து அருள்புரிவது போல ஒரு பெரிய வட்ட வடிவமான பாறைமீது கருவறையும் கோவிலும் அமைந்திருப்பதைக் காணலாம்.

தல வரலாறு :

              விவசாயி ஒருவர் கனவில் முருகன் தோன்றி ஒரு குறிப்பிட்ட இடத்தில் தான் சுயம்பு மூர்த்தமாக உள்ளதாகவும், அங்கு தனக்கு ஒரு கோவில் அமைத்து வழிபாடு செய்யுமாறும் கூறினார்.

              அவ்விவசாயி ஊர் பெரியவர்களை அழைத்துச் சென்று குறிப்பிட்ட இடத்தில் பார்த்தபோது ஒரு சுயம்பு மூர்த்தம் இருப்பதைக் கண்டனர். அவ்விடத்தில் ஒரு கற்கோவிலை எழுப்பி தினசரி பூஜைகள் நடத்தப்பட்டன. அங்கு தண்டத்துடன் கூடிய அழகிய முருகன் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர்.

              கிராம மக்கள் ஒன்று கூடி பேசி கோவில் கருவறை திருப்பணி, முன்மண்டபம் கட்ட முடிவு செய்தனர். மூலவர் சிலையை பால் அபிஷேகம் செய்து கோவில் வாயு மூலையில் தற்காலிகமாக அறை அமைத்து அதில் மூலவர் சிலையை வைத்து பூஜித்து வந்தனர். அனைத்து வைபவங்களும், ஆராதனைகளும் இச்சன்னதியில் நடைபெற்று வந்தன.

தல பெருமை :

              நான்கு புறமும் தேர் ஓட நல்ல அகலத்துடனும், சதுரவடிவிலும் 400 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டு நிர்மாணித்திருப்பது சிறப்பாகும்.

              தேரோட்டத்தில் பொதுமக்கள் வடம் பிடித்து இழுக்க, அசைந்து ஆடிவரும் தேரின் அழகு, புன்னகை ததும்பும் முகத்தோடு வள்ளி தெய்வானையுடன் பவனி வரும் பாங்கு ஆகியவற்றைக் காண கண்கோடி வேண்டும்.

             ஒருசமயம் கருவறையின் தென்பகுதியில் திடீரென வெடி சத்தத்துடன் பாறை பிளந்து விழுந்த ஓசை கேட்டது. ஊர் மக்கள் அங்கு வந்து பார்த்தபோது கண் வடிவில் ஒரு ஆழமான பள்ளம் தென்பட்டது. அப்பள்ளத்தில் நீர் நிரம்பி இருந்தது. இறைவன் தனக்குத் தேவையான தீர்த்தத்தை தானே உருவாக்கிக் கொண்டார். இச்சுனையின் ஆழம் சுமார் 8 அடி. சுவையான நீரைக் கொண்ட இச்சுனையில் வருடம் முழுவதும் வற்றாமல் ஊறிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்க அம்சம். சுவாமியின் அபிஷேகத்திற்கு பயன்படும் இத்தீர்த்தம் சரவண தீர்த்தம் என விளங்குகிறது.

பிரார்த்தனை :

               திருமணத்தடை, குழந்தை வரம் போன்றவற்றிற்காக ஏராளமான பக்தர்கள் வந்து பிரார்த்திக்கின்றனர். ஒரு காரியத்தை மனதில் நினைத்து வேண்டினாலே நிறைவேறிவிடும்.

அருள்மிகு வட்டமலை ஆண்டவர் திருக்கோவில் சுற்றுலா தலம்

கருத்துகள் இல்லை