* மாவட்டம் : கோயம்புத்தூர்

              * இடம்    : காந்திபுரம்

              * முகவரி  : ATT காலனி, கோபாலபுரம், காந்திபுரம், கோயம்புத்தூர்

              * தாலுகா    : காந்திபுரம்

வரலாறு  : 

             வ. உ. சிதம்பரனார் பூங்காவும் மிருகக் காட்சிச்சாலையும் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இருக்கும் கோயம்புத்தூர் நகரின் மையப்பகுதியான காந்திபுரத்தில் அமைந்துள்ளது. சுருக்கமாக வ. உ. சி. பூங்கா என அழைக்கப்படும். இதுவொரு உயிரியல் மற்றும் பொழுதுபோக்கு பூங்காவாகச் சுற்றுலாப் பயணிகளை கவர்கிறது.

             2013 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இங்கு 335 பறவைகள், 106 பாலூட்டிகள் மற்றும் 54 ஊர்வன உள்ளிட்ட 890 விலங்குகள் இருக்கின்றன. சுதந்திர போராட்ட வீரர் வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் பெயர் இப்பூங்காவிற்கு சூட்டப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சி இப்பூங்காவை நிர்வகிக்கிறது.

            வ. உ. சி. பூங்கா இது கோயம்புத்தூர் மாநகராட்சியால் நிர்வகிக்கப்பட்டும் பராமரிக்கப்பட்டும் வருகிறது. இப்பூங்கா சிறுவர் முதல் அனைத்து வயதினருக்கும் பொழுதுபோக்கு மையமாக விளங்குகிறது. இப் பூங்காவினையொட்டி வ. உ. சி. உயிரியல் பூங்கா உள்ளது.

             சிறுவர்களுக்காக விளையாட்டுச் சாதனங்களும், விளையாட்டுத் தொடர்வண்டியும் அதற்கான சிறிய தொடருந்து நிலையமும், சார்மினார், வானூர்தி, பீரங்கி ஆகியவற்றின் மாதிரி வடிவமைப்புகளும், பசுமையான புல்தரையும், மரங்களும், அவற்றுக்கு நடுவே ஆங்காங்கே சிலையமைப்புகளும் வண்ண மீன்கள் நிலையமும் இங்கு காணப்படுகின்றன.

வ.உ.சி. பூங்கா சுற்றுலா தலம்

கருத்துகள் இல்லை