* மாவட்டம் : திருச்சிராப்பள்ளி

              * இடம்    : ஶ்ரீரங்கம்

              * முகவரி  : மேலூர், ஶ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி.

              * தாலுகா    : ஶ்ரீரங்கம்

வரலாறு  : 

                மனதை கொள்ளை கொள்ளும் வண்ணத்துப்பூச்சி பூங்கா, திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கத்தில் உள்ள மேலூரில் அமைந்துள்ளது.

                இந்த பூங்கா சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காவாகும். இங்கு வண்ணத்துப்பூச்சி இனங்களை பாதுகாக்கவும், அவற்றின் எண்ணிக்கையை பெருக்கும் நோக்கிலும் இயற்கை சூழலில் உருவாக்கப்பட்டுள்ளது.

                இப்பூங்காவில் 27 நட்சத்திரங்களுக்கு உரிய 27 வகை மரங்களை கொண்ட நட்சத்திர வனம் மனதில் மகிழ்ச்சி வெள்ளத்தினை ஏற்படுத்துகிறது.

                இந்த பூங்காவில் வண்ணத்துப்பூச்சிகள் விரும்பி உண்ணும் தாவரங்கள், பல்வேறு வகையான மலர்ச்செடிகள், குறுமரங்கள், குறுஞ்செடிகள் மற்றும் புல்வெளிகள் ஏராளமாக காணப்படுகின்றன.

               இங்கு சிறுவர்களை கவரும் வகையில் விளையாடுவதற்கு தனிப்பூங்கா உள்ளது. இதில் ஊஞ்சல், சறுக்கு ஏணி, இராட்டினங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

               மேலும், இங்கு சிறுவர் படகுக்குளம் மற்றும் இரும்பு தகடுகளால் வண்ணத்துப்பூச்சி வடிவில் செயற்கையாக செய்யப்பட்ட உருவமும், செயற்கை கல்மரமும் அமைக்கப்பட்டுள்ளது.

சிறப்புகள் :

               * வண்ணமயமான வண்ணத்துப்பூச்சிகள்...

               * எழில்மிகு நட்சத்திர வனம்...

               * வண்ணத்துப்பூச்சி இனப்பெருக்க மையம்...

               * செயற்கை நீருற்றுகள்...

               * பூத்துக்குலுங்கும் பூக்கள்...

               * பசுமையான புல்வெளிகள்...

               * இளைப்பாறும் குடில்கள் மற்றும் நிழற்குடைகள்...

               * வரிசை மாறாது செல்லும் வாத்துகள்...

               * தகவல் தரும் விளக்க படங்கள்...

               * தொங்கும் நடைபாதைகள்...

எப்படி அடைவது?

               இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா, ஶ்ரீரங்கத்திலிருந்து மேற்கே 6 கி.மீ. தொலைவிலும், முக்கொம்பிலிருந்து கிழக்கே 7 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

வண்ணத்துப்பூச்சி பூங்கா சுற்றுலா தலம்

கருத்துகள் இல்லை