* மாவட்டம் : திருவண்ணாமலை

              * இடம்    : தென்னாங்கூர்

              * முகவரி  : தென்னாங்கூர், திருவண்ணாமலை

              * தாலுகா    : செய்யாறு

வரலாறு  : 

               ஒரிசா மாநிலத்து பூரி ஜகந்நாதர் கோயிலைப் போன்று 120 அடி உயரத்தில் கோபுரமும் ஒன்பதரை அடி உயரத்தில் தங்க கலசமும், அதன் மேல் சுதர்சன சக்கரமும், காவிக்கொடியும் பார்ப்பவரை பிரமிக்க வைக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

               கோயிலின் ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பலிபீடத்தை தாண்டி 16 கால் மண்டபம் உள்ளது. இதன் நடுவில் கருடாழ்வார் வீற்றிருக்கிறார். மகாமண்டபத்தில் நுழைந்தவுடன் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டதைப் போன்ற உணர்வு.

                இங்கு தான் கோவிந்தராஜப் பெருமாள் திருப்பதியைப் போல், சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் கல்யாண உற்சவம் கண்டு அருள்கிறார். இங்கு பெருமாளின் திருக்கல்யாணம் வைதீக சம்பிரதாயமும், பஜனை சம்பிரதாயமும் இணைந்த உற்சவம் நடத்தப்படுகிறது. கோயிலின் பின்பக்கம் ஞானானந்த சுவாமிகளின் பிருந்தாவனம் அமைந்துள்ளது.

அருள்மிகு பாண்டுரங்கன் திருக்கோயில் சுற்றுலா தலம்

கருத்துகள் இல்லை