* மாவட்டம் : திருவண்ணாமலை
* இடம் : தேவிகாபுரம்
* முகவரி : தேவிகாபுரம், திருவண்ணாமலை
* தாலுகா : ஆரணி
வரலாறு :
சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்புரிகிறார். ஒரே கருவறையில் எங்கும் இல்லாதபடி இரண்டு லிங்கங்கள் உள்ளது.
சிறப்பு :
சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. 500 அடி உயரத்தில் 365 படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளது.
எல்லாநாளும் நல்ல நாளாக அமைய வேண்டும் என்பதற்காக இந்த எண்ணிக்கையில் படிகள் அமைக்கப்பட்டது. 3 நிலை ராஜகோபுரம், நந்தி, பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், சப்தமாதர், தெட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், அகோர வீரபத்திரர் அருள்பாலிக்கிறார்கள்.
இங்கு விசாலாட்சி அம்மன் சன்னதியும் உள்ளது. கீழே உள்ள பெரியநாயகி அம்மன் தனி சன்னதி. விஜய நகர கிருஷ்ணதேவராயர் காலத்தில் கோயில் கட்டப்பட்டதாக தெரிகிறது. அழகிய சிற்பங்கள் உள்ள அற்புதமான கோயில் இது.
கருத்துகள் இல்லை